யுத்தச் சூழல் காரணமாக தேசிய மின்வினியோக வலைப்பின்னலில் பல வருடங்களாக துண்டிக்கப்பட்டிருந்த யாழ் குடாநாடு பல வருடங்களாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. போர் முடிவடைந்ததையடுத்து , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் ஆகிய இடங்களில் தேசிய மின்விநியோக வலைப்பின்னலின் பெரிய மின்மாற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கான மின்விநியோகத் திட்டமானது. 3.5 பில்லியன் ரூபாய் செலவில் செயற்படுத்தப்பட்டிருக்கின்றது.இதன் மூலம் யாழ் மாவட்டத்திற்கு தடங்கலில்லாத வகையில் நாள் முழுதும் மின்விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வடமாகாண ஆளுனர் சந்திரசிறி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire