தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரை நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக காப்பாற்றப்பட்ட மியன்மார் நாட்டைச்சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டவர்களே மேற்கண்டவாறு தெரிவித்தனர் என்று பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.
இவர்களுடன் குறித்த படகில் பயணித்த 98 பேர் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டுவிட்டதாக உயிர்தப்பிய மியன்மார் நாட்டைச்சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கில் கடற்படையினரால் மீட்கப்பட்டு காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட 32 பேரும் காலி கராப்பிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Aucun commentaire:
Enregistrer un commentaire