lundi 4 février 2013

புலிகளின் வாகனங்கள் ஏலத்தில் விற்பனை!


போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு கைவிட்டுச் சென்ற 8,000 வரையான வாகனங்கள் தற்போது கிளிநொச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இவற்றை தற்போது விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனங்களை ஏலம் விடுவதற்கு முன் இந்த வாகனங்கள் போக்குவரத்திற்கு தகுதியுடையதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இருவர் கிளிநொச்சிக்கு செல்லவுள்ளதாபவும் ஆராய்வின் முடிவில் போக்குவரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வாகனங்களாக காணப்படுபவை ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதுடன், ஏனையவற்றை உடைத்து பழைய இரும்பாக விற்பனை செய்யப்பட உள்ளதாகமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire