mardi 19 février 2013

ஜே வி பி யை புதைத்த  மனித புதைகுழி பகுதி பாரிய குற்றச்செயல் இடம்பெற்ற இடமாக கருதப்படுகிறது



மாத்தளையில் தோண்டியெடுக்கப்படும் மனித எச்சங்கள் உள்ள பகுதி குற்றங்கள் நிகழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இதனை மாத்தளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அஜித் ஜெயசேன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புகள் மற்றும் ஏனைய எச்சங்கள் வெளிநாட்டுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இதனை தவிர இன்னும் பல பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையக பணிப்பாளர் பெசில் பெர்ணான்டோ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
1980 ஆம் ஆண்டுக்களில் ஜே வி பி அரசாங்கத்துக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியின் போது கைதுசெய்யப்பட்டவர்களே இந்த புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று பெசில் பெர்ணான்டோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire