jeudi 14 février 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ;பிரச்சினைகளை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் கட்சி


ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போது, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருப்பது அதன் அரசியல் காய்நகர்த்தலாகும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.    சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப்பணியை பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை, அந்தக்கட்சி எப்போதுமே இலங்கையின் பிரச்சினைகள் தீரவேண்டும் என்று எதிர்பார்க்கும் கட்சியல்ல என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இலங்கையில் பிரச்சினைகளை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் கட்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire