lundi 18 février 2013

சிங்கப்பூரில் அரசுக்கு எதிராக அரிதான ஆர்ப்பாட்டம்


வெளிநாட்டினரை அனுமதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக சிங்கப்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சிங்கப்பூர் அரசின் கொள்கை அறிக்கையில் 2030 இல் சிங்கப்பூர் மக்கள் தொகை 69 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் அதில் வெளிநாட்டினர் சுமார் பாதிப்பேராக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளின் அதிகரிப்பால் காணி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதாக உள்நாட்டினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு எதிராக கடந்த சனிக்கிழமை கடும் மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் 4000 க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளதோடு இது சிங்கப்பூரில் இடம்பெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் ஸ்திரதன்மை கொண்ட சிங்கப்பூரில் இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவது அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire