ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவராக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றிரவு இந்த நியமனத்தை மேற்கொண்டதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 4.20க்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire