dimanche 17 février 2013

ரணில் விக்கிரமசிங்காவின் உண்ணாவிரத நாடகமும். அடுத்து இடம்பெறவிருக்கும் (2015ல்) ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்கான ஆதாரமும்.




இலங்கையில் இடம்பெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்களின் வாக்குகள் செல்லாக்காசாகவே புறந்தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே (15.02.2013ல்)இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியினரும், அவர்களின் சில்லறைகள் சிலவும் பங்குகொண்டுள்ளனர். இந்நிகழ்வின்மூலம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதன்மூலம் நிறைவேற்று அதிகார அரசியலமைப்பைக் கொண்ட ஜனாதிபதிக்கான ஆசனத்தில் அமரலாமென ஐ.தே.கட்சியினர் (U.N.P) Until Next Parliament கனவு காண்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே இரு தடவைகள் தோல்வியுற்றதன் காரணமாக போட்டியிட ரணில் விக்கிரமசிங்கா அஞ்சியநிலையில் 30 வருடகாலமாக இராணுவத் தளபதியாக பணியாற்றியவரும், பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பிரதான காரணியாக செயலாற்றியவருமான சரத் பொன்சேகா அவர்களை களமிறக்கினர். அதற்கமைய பல மில்லியன் ரூபாய்களுக்கு அதிபதிகளாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயங்கரவாதிகளும். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் தத்தமது சட்டைப் பைகளை நிரப்பினர். எது எவ்வாறாயினும் அடுத்து இடம்பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கான சன்மானமாக பயங்கரவாதிகள் பெறப்போகும் தொகை பாரிய அளவிலானதாகவே அமையப்போவது மட்டும் நிட்சயமாகும். அதேவேளை வாக்களிக்க இருக்கும் தமிழ் வாக்காளர்கள் ஏமாளிகள் என்பதே வரலாறாகும்.


Aucun commentaire:

Enregistrer un commentaire