பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் நடத்திய குண்டு வீச்சில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.வடமேற்கு பாகிஸ்தானில் வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில், பாபர் கர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இரண்டு குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் அந்த வீடு தரைமட்டமானதாகவும் அதில் இருந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியதாக தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தன.இத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வானொலி கூறியது. தாக்குதல் நடைபெற்ற பகுதி, தலிபான் மற்றும் அல்காய்தா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire