சம உரிமை இயக்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கெயெழுத்து வேட்டையொன்று இன்று மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மொபெரும் கையெழுத்து வேட்டையில் வட-கிழக்கில் இரானுவ ஆட்சியை உடன் நிறுத்து, -கிழக்கில் அரசியல் சிறைக்கைதிகளை உடன் விடுதலை செய், கைதுகள் கடத்தல்களை உடன் நிறுத்து, மக்களிடம் கொள்ளையிடுவதை உடன் நிறுத்து, வட-கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்புக்கு பிரயாணிகள், பாதசாரிகள், வியாபாரிகள் மட்டு வாழ் மக்கள் என பலரும் இக்கையெழுத்து வேட்டையில் கையொப்பமிட்டு வருகின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire