dimanche 10 février 2013

கொலைக் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டால் விரைவில் மூவருக்கும் ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire