இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார அகதிகளே என்று அவுஸ்திரேலியா எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.30 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இந்தியாவிற்கு செல்லாமல் மூவாயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அவுஸ்திரேலிவுக்கு வருவது இதனை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கில் காணிப்பிரச்சினை மற்றும் தொழிற்பிரச்சினை என்பவற்றையே அடையாளம் காணக்கூடியதாக இருந்தாக தெரிவித்தார்.
அத்துடன் அது சாதாரண நடைமுறைப் பிரச்சினையே என்றும் எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டினார்.தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அகதிகள் விடயத்தில் புலனாய்வுத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேயா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வி யொன்றிலேயே அவுஸ்திரேலியா எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire