பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மற்றும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மோ யான் உள்ளிட்டோர், சீன எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சீன அதிபர், ஜி சின்பிங் தலைமையிலான நிர்வாக குழு, பல்வேறு துறைகளை சார்ந்த பிரதிநிதிகளை, பார்லிமென்ட் மேல்சபை உறுப்பினர்களாக, தேர்வு செய்துள்ளது.ராணுவ அதிகாரிகள், அரசியல் மற்றும் பொருளாதார துறைகளை சேர்ந்த, பிரதிநிதிகள் உள்ளிட்ட, 2,237 பேர், எம்.பி.,க்களாக, தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.இதில், ஆளுங்கட்சியான கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த, 893 பேரும், அடக்கம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 399 பேர் பெண்கள்.ஹாங்காங்கை சேர்ந்த, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கடந்த ஆண்டு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மோ யான் ஆகியோரும் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire