இந்தியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இற்குச் சொந்தமான விசேட விமானத்தில் சற்றுமுன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.இந்தியாவிற்கு விஜயம் செய்த அவர் தனது விஜயத்தின் இறுதி அங்கமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று சென்றிருந்தார்.
அதிகாலையில் இடம்பெறும் சுப்ரபாத சேவையில் அவர் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். பின்னர் கோவில் ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு கோவில் அதிகாரிகள் பட்டு வஸ்திரம் அணிவித்துள்ளதுடன் பின்னர் லட்டு பிரசாதங்களையும் வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதியுடன் இலங்கையின் முதல் பெண்மனி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் 70 பிரதிநிதிகளும் வழிபாடுகளில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கு ‘மஹா துவாரம்’ வழியைத் தவிர்த்த அவர் சாதாரண பக்தர்களுக்கான ‘வைகுந்தம்’ வரிசையில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின்னர் விசேட விமானமொன்றின் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire