இனங்களின் பெயரால் இடம்பெறும் துன்புறுத்தல் இன்னல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கென பொலீஸ் தலைமையகத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் புதிய பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஏதாவது ஒரு மதத்தை விமர்ப்பது, மதத்தலைவர்களை அசௌகரியத்துக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கென பொலீஸ் தலைமையகத்தினால் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகஞ்செய்து வைக்கப்பட்டுள்ளன.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களினூடாக இது குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என பொலீஸ் தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
தொலை பேசி இலக்கங்கள்- 011 3182904 / 011 3188753 பெக்ஸ் இலக்கம்.-011 3182904 – 011 3188753 .இந்த தொலைபேசி இலக்கங்கள் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire