mardi 12 février 2013

10 மில்லியன் பேர் இலங்கைக்கு வருகை அரசுக்கு ரூ. 2 பில்லியன் வருவாய்


ஒன்லைன்(Online)மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authurization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.இதனூடாக அரசாங்கம் இரண்டு பில்லியன் ரூபா வருமானமாக உழைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
உலகிலே ETA முறைமையை பயன்படுத்தும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உட்பட 48 நாடுகளில் இலங்கையானது முதலிடம் பெற்றுள்ளதாகவும், இலங்கை (online) சேவையில் காணப்படுகின்ற துரித வேகம், வசதித்தன்மை மற்றும் நெகிழ்வுத் தன்மை என்பனவே அதற்கான பிரதான காரணமாகும் எனவும் தெரிவித்த அவர் அதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு ‘பியுச்சர் கப்’ விருது கிடைக்கப்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டிலே வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்குவதற்கு இச்சேவையில் மேலும் பல வசதிகளை வழங்க உள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் கூறினார்.இலங்கையர்களின் வசதி கருதி இரட்டைப் பிரஜாவுரிமை பற்றிய சட்ட ஆவணங்களை தயாரித்து வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்

Aucun commentaire:

Enregistrer un commentaire