இலங்கையை சேர்ந்த பெண்கள் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது. சவூதி அரேபியாவில் 5 லட்சம் இலங்கை மக்கள் பணிபுரிகின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸப்னா நஃபீக் என்ற இலங்கையைச் சேர்ந்த பணியாளருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு வீட்டு வேலைக்கு ஆள்களை அனுப்புவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு (ஏஎல்எஃப்இஏ) தலைவர் எம்.பி. அபோன்சா கூறுகையில், ""சவூதிக்கு வீட்டு வேலைப் பணியாளர்களை அனுப்புவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சவூதி அதிகாரிகள், பணியாளர்களுக்கு காப்பீடு உத்தரவாதம் வழங்கும் வரை இத்தடை நீடிக்கும். இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் திலான் பெரைராவுடன் கலந்தாலோசிக்கப்படும்'' என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire