(காணொளியில் பார்க்க.....)இந்தியாவின், தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தை அவருடைய கட்சி எம்.எல்.ஏ ஒருவர் அடித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் சென்றுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் வெளியே வந்தார். இதன்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், தீடீரென்று சில தொண்டர்களை அடிக்கவும் செய்தார். பிறகு அவர் விஜயகாந்தையும் ஓங்கி அடித்துள்ளார். இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சியடைந்தார். கட்சி எம்.எல்.ஏ.வே விஜயகாந்த்தை அடித்த காட்சியைப் பார்த்த தொண்டர்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உரைந்துப்போனார்கள். ஆனால் அடித்தவோ தனக்கு எதுவும் தெரியாத வகையில் நடந்துகொண்டார். ஆனால் இக்காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் பொது இடத்தில் தனது கட்சி உறுப்பினரொருவரை அடித்தவர். இந்நிலையில் அவரே பொது இடத்தில் அடிவாங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடித்தவருக்கு என்ன நிலை ஏற்படப்போகுதோ என தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire