இறுதி யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மகன் பாலந்திரன் என அடையாளப்படுத்தப்பட்ட யாரும் உயிருடன் பிடிபடவில்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த பாலசந்திரனின் மூன்று புகைப்படங்கள் தொடர்பில் எமது செய்திப்பிரிவு அவரிடம் வினவிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இறுதி யுத்தத்தல் சுமார் 450 சடலங்கள் வரையில் மீட்கப்பட்டன.
அவற்றை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனே அடையாளம் காட்டியதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவற்றை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனே அடையாளம் காட்டியதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த சடலங்களுடன் வேலுபிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் என்டனியின் சடலம் பிரதி அமைச்சரால் அடையாளப்படுத்தப்பட்டது.
எனினும் பாலசந்திரனின் சடலம் அவற்றுடன் காணப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த புகைப்படங்கள் உண்மையானது எனவும், பாலசந்திரன் மிகவும் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் செனல் 4 தொலைக்காட்சியின் புகைப்படவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire