ஜெனிவா கூட்டத்தொடர், கொமன்வெல்த் மாநாடு பான்ற நெருக்கடிகளில் சிக்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அவற்றில் இருந்து விடுபடும் உத்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்துள்ளார்.
கண்புரை நீக்க சத்திரசிகிச்சைக்காக இரா.சம்பந்தன் இந்தியா சென்றிருந்தபோது, கடந்த 5ம் நாள் அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் இரா.சம்பந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடு திரும்பியதும் சந்திக்க விரும்புவதாக, இரா. சம்பந்தனிடம் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
அதற்கு அவர், நாடு திரும்பியதும் அதுபற்றி ஆலோசிப்பதாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இம்மாதக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ள நிலையிலும், கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பும் நடத்துவதிலும் சிறிலங்கா அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடர வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலக சமூகம் வலியுறுத்தி வரும் நிலையில், நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கும் உத்தியாகவே இரா.சம்பந்தனுக்கு சிறிலங்கா அதிபர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், சிறிலங்கா அதிபரின் இந்த அழைப்பை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aucun commentaire:
Enregistrer un commentaire