mercredi 6 février 2013

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இலங்கை அணி இந்தியாவை 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.


மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரில், ஏ பிரிவில்நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 138 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டது.

இதன்மூலம் இலங்கை அணி சுப்பர்-6 சுற்றுக்கு முன்னேறியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தீபிகா ரசங்கிக்கா 109 பந்துகளில் 84 ஓட்டங்களையும் அணித் தலைவி ஷஷிகலா சிரிவர்தன 67 பந்துகளில் 59 ஓட்டங்களையும், இஷாணி கௌஷல்யா 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஒட்டங்களையும் , யசோதா மென்டிஸ் 80 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுக்களையும் அமித்தா சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியில் வெற்றிபெற 283 ஓட்டங்களையும், சுப்பர் 6 சுற்றில் தகுதிபெற ஆகக் குறைந்தது 251 ஓட்டங்களையாவது பெற வேண்டுமென்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 42. 2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 138 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக றிமா மல்கோத்ரா 51 பந்துகளில் 38 ஓட்டங்களையும், திருஷ் காமினி 22 ஓட்டங்களையும் அணித்தலைவி மித்தாலி ராஜ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன, சாமனி செனவிரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் இஷானி கௌஷல்யா , உதேஷிக்கா பிரபோதனி, ஸ்ரீ பாலி வீரக்கொடி இனோக்கா ரனவீர, சன்டமாலி தொலவட்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire