அண்மையில் புதுடெல்லிக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்தியப் பிரதமர் உள்ளிட்ட அனைத்து முக்கிய அதிகார மட்டங்களுடனும் இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணத்தை அடுத்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகாவுக்கு புதுடெல்லியில் அளிக்கப்பட்ட வரவேற்பு பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.
அவர் புதுடெல்லியில் சந்திப்புகளை நடத்தும் வரை எல்லாமே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.
இந்திராகாந்தியின் காலத்தில் இருந்தே, இந்தியாவின் அதிகார மட்டங்களுடன் சந்திரிகா குமாரதுங்க நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவர்.
இவர் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான அதிகாரமட்டத்தினர் அனைவரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
எனினும் சந்தரிகா குமாரதுங்க இந்தியதலைவர்களுடன் என்ன பேசினார் என்ற விபரம் இதுவரை இரகசியமாகவே உள்ளது.
எதையும் இலகுவாக மோப்பம் பிடித்து விடும் இந்திய ஊடகங்களால் கூட கண்டுபிடிக்க முடியாததாக இந்த இரகசியம் உள்ளது.
வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ள நிலையில், இந்திய அதிகாரமட்டத்துடன் சந்திரிகா குமாரதுங்க இந்த இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

Aucun commentaire:
Enregistrer un commentaire