அல்கய்தா மற்றும் தலிபான் இயக்கங்களை தடை செய்யக் கூடாது என இலங்கை முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான சட்டங்களின் மூலம் முஸ்லிம் சமூகம் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடுமென சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை முஸ்லிம் பேரவையின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சாரங்கள் ஏனைய சமூகங்களுடான உறவுகளை பெரிதும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அல் கய்தா, தலிபான்க இயக்கங்களை தடை செய்வதன் மூலம் முஸ்லிம் வர்த்தக சமூகம் பாதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் இராஜதந்திரி எம்.எம். சுஹைர் தெரிவித்துள்ளார்.
அதிகளவிலான முஸ்லிம்கள் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அதனை சிலர் துஸ்பிரயோகம் செய்யக் கூடும் எனவும் இதனால் சிறுபான்மை முஸ்லிம் சமூக வர்த்தகர்கள் பாதிக்கப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்பத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire