வெள்ளை நிறத்திலான அதி உயர் சொகுசு காரான றோல்ஸ் றொயிஸ் ஒன்று இலங்கைக்கு சில வாரங்களுக்கு முன்னர் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அரச தரப்பில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் இறக்குமதிசெய்துள்ளதாகவும், குறிப்பிட்ட கார் மூன்றுலட்சம் அமெரிக்க டார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அது 1 லட்சத்தி 7 ஆயிரம் அமெரிக்க டாலரே பெறுமதியானது என்று, சுங்கத் திணைக்களத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாகவே அதற்கான வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோஸ்ட் கார்(பேய் கார்) என்று இதனை இலங்கையில் அழைக்கிறார்கள் என்ற செய்திகளும் பரவலாக அடிபடிகிறது.
இந்த அதி சொகுசு வண்டி இலங்கைக்கு இறக்குமதிசெய்யப்பட்ட விவகாரம், மீடியாக்களில் உடனடியாகவே வெளிவந்துவிட்டதால், இதனை யாருக்கா இறக்குமதி செய்தோம் என்பதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது என்று கூறப்படுகிறது. இலங்கையில் காமன் வெலத் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளதால், அதற்காக இதனை வாங்கியுள்ளதாக, அரச சார்பு ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும் இந்த செகுசு வண்டியை, மகிந்தரின் புதல்வருக்கா சில அதிகாரிகள் வாங்கியிருக்கலாம் என்றும் ஊர்ஜிதமற்ற செய்திகள் சில மேலும் தெரிவிக்கின்றன.

Aucun commentaire:
Enregistrer un commentaire