உலக அரங்கில் தமிழ் மொழியை எடுத்து சென்று தமிழுக்கு புகழை சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவர் மறைந்து இன்றுடன் 44 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் இன்றும் என்றும் உலகத் தமிழர்களின் மனங்களில் குடி கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய சுய நலம் அற்ற, தூய்மையான, அர்பணிப்பான, சகோதரத்துவம் கனிந்த,ஏழ்மையான, 100% பொதுநலமான சமூக பணியும், அரசியல் செயற்பாடுகளுமே அதற்கு உயிர் ஊட்டிக் கொண்டு இருந்கின்றது. இறந்தவர் புகழ் காலப் போக்கில் அழிந்து செல்லும், அனால் அண்ணாவின் புகழ் கடல் போல பெருகிச் செல்கின்றது என்றால் அவரின் மனித நேயம் கனிந்த செயற்பாடுகளே காரணம். ஈழத் தமிழ் இனம் என்று ஒரு இனம் ஈழத்தில் இருக்கின்றதென்பதை 1964 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்துரைத்த மாமேதை அவர்களுக்கு எனது இதய அஞ்சலியை செலுத்தி அண்ணாவைப் போல எல்லோரும் நல்லவர்களாக இவ்வுலகில் வாழ வேண்டும், புதியவர்கள் பிறக்க வேண்டுமென இறைவனை பிராத்திகின்றேன்.
"வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்தின் மேலாக வைக்கப் படும்"
வள்ளுவனுக்கு ஒரு பிள்ளை
வையகத்தில் வந்தாயே
அது நடராசனின் பிள்ளை என
சகலரும் நினைத்திட
உன்னை
தமிழ் மக்களின் பிள்ளை ஆக்கினாரே
நினைப்பதற்கோ பல நினைவுகள்
தமிழ் மக்களுக்கு இருந்த போதும்
உன்னை நினைக்காத நாட்களோ
அவர்களுக்கு இல்லை
உலகத்தில் தமிழுக்கோ
ஒரு தேசமும் இல்லையென
தமிழ் மக்கள் புலம்பிடவே
தமிழகத்திற்கு தமிழ் நாடு என
நாமம் தனை சூட்டினாயே
சாதி மத வேறு பாடு நமக்கு வேண்டாம்
என எதுத் துரைதாயே
மனிதம் தன்னில் ஓடும் குருதி
எல்லோருக்கும் சிவப்பு என
சாதி மதத்திற்கு அறிவுரை ஊட்டினாயே
ஈழத் தமிழ் என ஒரு இனம்
ஈழத்தில் உண்டு என
ஐக்கிய நாடுகள் தன்னில்
1964 இல் எடுத்துரைத்தாயே
தமிழருக்கு ஆங்கிலம் தெரியாதென
கிண்டல் செய்த அமெரிக்க மாணவனுக்கே
பிழையற்ற ஆங்கில இலக்கணத்தை விளக்கினீர்கள்
நீங்களோ மறைந்து 44 வருடங்கள்
எங்களுக்கோ நீங்கள் என்றும் மேதை தான்
நல்ல வழி காட்டி தான்
வாழ்க உங்கள் புகழ் தமிழ் உள்ளவரை
உலகம் உள்ளவரை
"வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்தின் மேலாக வைக்கப் படும்"
வள்ளுவனுக்கு ஒரு பிள்ளை
வையகத்தில் வந்தாயே
அது நடராசனின் பிள்ளை என
சகலரும் நினைத்திட
உன்னை
தமிழ் மக்களின் பிள்ளை ஆக்கினாரே
நினைப்பதற்கோ பல நினைவுகள்
தமிழ் மக்களுக்கு இருந்த போதும்
உன்னை நினைக்காத நாட்களோ
அவர்களுக்கு இல்லை
உலகத்தில் தமிழுக்கோ
ஒரு தேசமும் இல்லையென
தமிழ் மக்கள் புலம்பிடவே
தமிழகத்திற்கு தமிழ் நாடு என
நாமம் தனை சூட்டினாயே
சாதி மத வேறு பாடு நமக்கு வேண்டாம்
என எதுத் துரைதாயே
மனிதம் தன்னில் ஓடும் குருதி
எல்லோருக்கும் சிவப்பு என
சாதி மதத்திற்கு அறிவுரை ஊட்டினாயே
ஈழத் தமிழ் என ஒரு இனம்
ஈழத்தில் உண்டு என
ஐக்கிய நாடுகள் தன்னில்
1964 இல் எடுத்துரைத்தாயே
தமிழருக்கு ஆங்கிலம் தெரியாதென
கிண்டல் செய்த அமெரிக்க மாணவனுக்கே
பிழையற்ற ஆங்கில இலக்கணத்தை விளக்கினீர்கள்
நீங்களோ மறைந்து 44 வருடங்கள்
எங்களுக்கோ நீங்கள் என்றும் மேதை தான்
நல்ல வழி காட்டி தான்
வாழ்க உங்கள் புகழ் தமிழ் உள்ளவரை
உலகம் உள்ளவரை
Aucun commentaire:
Enregistrer un commentaire