vendredi 1 mars 2013

எனது தந்தை அரசியலுக்காக நான்காயிரம் ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியை விற்றார்: சந்திரிக்கா

என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,
எமது நாட்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் இரண்டாயிரம் பேர் அதிகாரத்தில் இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆக குறைந்த கல்வி தமைமையுடையவர்களாவர். இந்நிலையில் எமது நாடு எவ்வாறு வளர்ச்சி அடையும்.
எனது ஆட்சி காலத்தில் எனக்கு உரிமை இல்லாத ஐந்து சதத்தை கூட நான் எடுத்தது கிடையாது. மேலும் எனக்கு வாக்களித்தவர்களுக்கு விருந்தளிக்கவும் இல்லை. எனது தந்தை அரசியலுக்காக நான்காயிரம் ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியை விற்றார். இதேவேளை அரசியலுக்காக எமது வீட்டையும் அடகு வைத்தோம்.
இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை. ஒரு வாகனத்தையே எமது பிள்ளைகளுக்கு பயன்படுத்த ஒதுக்கியிருந்தோம். இவ்வாறான வீண்விரயங்களை குறைத்து ஆட்சி புரிந்தமையாலேயே 150 கோடி ரூபாவிற்கு ஒரு கிபீர் விமானம் வீதம் எம்மால் யுத்தத்திற்கு செலவிட முடிந்து. எனவேதான் யுத்தத்தையும் வெற்றிகொள்ள முடிந்தது.
1972 -‍‍ 1976ம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட சுய உற்பத்திக் கொள்கையினால் தோட்ட தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு வழியிலாம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த வேதனை எடுத்து கூறும் பாடலே இது!


பண்டாவின் ஆட்சியிலே.. - நாங்கள்
பட்டினியில் வாடலானோம்...
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதை பதைத்து துடிக்குதடீ தங்கமே தங்கம்

அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க‌
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க‌
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்

சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே

தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம‌
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!

ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம‌
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம‌
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.

(அரிசியில்ல)

பின் குறிப்பு: மலைக நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவைகள் பேச்சு வழக்கு மொழியிலே காணப்படும். எழுதிவைக்கப்படாத காவியங்கள் நிலைப்பதற்கில்லை எனவே இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire