மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர்.
திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
பயத்தினால் பொலிஸாருக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire