இந்தியா இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை. இந்தியாவின் நிலைப்பாடுகள் இறுதி நேரத்திலும் மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன?கெஹெலிய ரம்புக்வெல
உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு சொந்த நாடு இல்லை. அதனை பெற்றுக் கொள்ளவே பிரபாகரன் போன்றவர்களை பயன்படுத்தி பெற முயற்சித்தனர். இறுதியில் அது பயனற்றுப் போனது.
இந்நிலையில் தற்போது பிரபாகரனின் செயற்பாட்டையொத்த நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு சம்பந்தன் செயற்படுகின்றார். அந்த வகையில் உலகத் தமிழர் பேரவையும் ஒன்று.
இதேவேளை, ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதா இல்லையாவென இந்தியா இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை. இந்தியாவின் நிலைப்பாடுகள் இறுதி நேரத்திலும் மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடும் தகவல்கள் மற்றும் அதனுடைய செயற்பாடுகள் அனைத்தும் முற்றிலும் பெய்யானவை என அவர் மேலும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire