இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது.இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா, உலகில் உயிர்ப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்று. இந்த எரிமலையில் இருந்து திடீரென்று கரும்புகையும், சாம்பலும் வெளியேறத் தொடங்கியுள்ளது. எரிமலையின் உச்சியில் 2,900 மீட்டர் உயரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள உட்குழிவான பகுதியில் இருந்து சாம்பல் வெளியேறுகிறது.கரும்புகை வெளியேறினாலும் அருகில் உள்ள கடனியா (Cஅடனிஅ) விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், எரிமலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இத்தலி அரசு தெரிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire