mardi 10 décembre 2013

அரை நூற்றாண்டு உறவுகளை சீர்குலைந்த நிலையில் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிய ஒபாமா

தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள், அங்கிருந்த கியூபத் தலைவர் ராகுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிக் கொண்டார்.
அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக உறவுகள் சீர்குலைந்த நிலையில் இருக்கும் இரு நாடுகளின் தலைவர்கள் இப்படியாகக் கைகுலுக்கிக் கொண்டமை, ஒரு அபூர்வமான நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.
ராகுல் காஸ்ட்ரோவின் அண்ணனான ஃபீடல் காஸ்ட்ரோவின் தலைமையில் 1959 இல் கியூபப் புரட்சி நடந்தது முதல், அமெரிக்கா அந்த நாட்டின் மீது தடைகளை அமல்படுத்தி வருகின்றது.

நெல்சன் மண்டேலாவுடன் உறவைப் பேணுவதாகக் காண்பித்துக்கொண்டு, தமது நாட்டில் சமத்துவமின்மையையும், கடுமையான வறுமையையும் எதிர்க்க மறுக்கின்ற, தமது சொந்த மக்களின் மாற்றுக் கருத்துக்களை சகித்துக் கொள்ளாத தலைவர்களை அதிபர் ஒபாமா தனது உரையில் விமர்சித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire