mercredi 25 décembre 2013

சங்கரியின் பெயரைக் கேட்டதும் ஓட்டமெடுத்த சம்பந்தன்: தள்ளாடும் வயசிலும் என்னப்பா ஓட்டம் ஐயோ.... ஐயோ...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வட-கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. காற்றுக் கூட புகமுடியாத அளவுக்கு கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு மூடுமந்திரக் கூட்டம் நடைபெற்றது. 

மும்மூர்த்திகளும் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றி வரும் நிலையில் தம்முடன் இணைந்து ஏமாற்றக் கூடியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் மும்மூர்த்திகளும் ஈடுபட்டனர்.

தமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் வாய்சண்டையில் ஈடுபட்டதால் காற்று புகாத ஓட்டைக்குள்ளாலும் வந்த சத்தங்கள் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தின. கடைசியாக மாலை 6 மணிக்கு அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பத்திரிகையாளரை சந்தித்தனர். காலை 9.30 இல் இருந்து கால்கடுக்க வெளியில் நின்ற பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் ஆனந்தசங்கரி கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன எனக் கேட்டார்? அப்போது பத்திரிகையாளர் முன்னால் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த சம்பந்தன் ' உதுக்கு பதில் சொல்ல முடியாது' , 'உதுக்கு பதில் சொல்ல முடியாது' என கத்திக் கொண்டு கதிரையை தள்ளிவிட்டு எழுந்து ஓடிவிட்டார். மின்னலாய் போன சம்பந்தனுக்கு பின்னால் அவரது பரிவாரம் சுமந்திரனும் வேட்டியைப் பிடித்துக் கொண்டு ஓடிவிட்டார். 

மண்டபத்திற்குள் சம்பந்தன் வரும் போது அவரை ஒவ்வொரு படிகளாக காட்டி பிடித்துக் கொண்டே வந்தே சக உறுப்பினர்கள் இருத்தினர். ஏனெனில் அவரது முதுமை அப்படியாச்சு. ஆனா ஆனந்த சங்கரி என்ற பெயரைக் கேட்டதும் அவர் ஓடின ஓட்டத்தில் சம்பந்தன் ஐயா இப்பவும் இளைஞர் மாதிரி ஓடுகிறாரே என எல்லோரும் திகைத்துப் போய் நின்றுள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire