lundi 2 décembre 2013

ஒரே வீட்டில் மனைவி–காதலி கணவருடன் வாழலாம் இந்திய நீதிமன்றில் பரபரப்புத் தீர்ப்பு

ஒரே வீட்டில் கணவருடன் மனைவி–காதலி வாழலாம் என்று லோக் அதாலத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் காந்த்வா பகுதியை சேர்ந்த பகந்த் மஹுலால் என்பவர் மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார். திருமணமான பகந்த், கடந்த 10 ஆண்டுகளாக தனது காதலியுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், காதலியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து மனைவியுடன் தங்க வைத்தார் பகந்த். இதனால் ஆத்திரம் அடைந்த பகந்த்தின் மனைவி, கணவரை விட்டு பிரிந்ததோடு, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை, போபால் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போது பகந்த்தும், அவரது காதலியும் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஒரே வீட்டில் தங்கியிருந்தாலும் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. மேலும் 3 பேரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தபோது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு தேசிய லோக் அதாலத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில் நடுவர் கங்காசரம் துபே அளித்த தீர்ப்பில், பகந்த் மஹுலால் தனது மனைவி மற்றும் காதலியுடன் 3 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வசிக்கலாம். வீட்டின் ஒரு பகுதியில் இருக்கும் அறையை பகந்த் எடுத்துக் கொள்ள வேண்டும். அதையொட்டி இருபுறமும் உள்ள அறைகளை மனைவி மற்றும் காதலிக்கு வழங்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பளித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire