samedi 28 décembre 2013

நெடுந்தீவு குதிரைகளை அழிவிலிருந்து காப்பாற்ற சரணாலயம்


யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் இருக் கும் மிகப் பெரிய தீவான நெடுந்தீவில் இருக்கும் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதை களுக்கென ஒரு சரணாலயத்தை அமைப் பதென்று வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இவை இத்தீவின் வரலாற்றை பிரதிபலிக்கும் சின்னங்களாக இருப்பதனால் இந்த காட்டு மிருகங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மிருகங்களுக்கு உண்பதற்கு இத் தீவில் உள்ள காடுகளில் போதியளவு இலை, குழைகள் இருக்கின்ற போதிலும் அவற்றுக்கு போதியளவு குடிநீர் இல்லை என்றும் இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக இக்காடுகளில் பாரிய குடிநீர் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
 நெடுந்தீவு 50 சதுரக்கிலோமீற்றரைக் கொண்ட ஒரு பரந்த பிரதேசமாகும் இதன் நீளம் 8 கிலோமீற்றராகவும் அகலம் 6 கிலோமீற்றராகவும் உள்ள இக்கடலை அடுத்து ஆழம் குறைவாக இருப்பதால் இங்கு பளிங்கு பாறைகள் பரந்திருக்கின்றன.
இந்த குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 17வது நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்த ஒல்லாந்து ஆளுநர்கள் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியதாக வரலாறு கூறுகிறது. 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். காலப்போக்கில் இத்தீவில் உள்ள கோவோறுக் கழுதைகளும், குதிரைகளும் மனித சகவாசம் இன்றி காட்டு மிருகங்களாக மாறின.

Aucun commentaire:

Enregistrer un commentaire