mardi 10 décembre 2013

இராணுவமும் அரசும் வடக்கில் சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றி வருகின்றது;சி.வி. விக்னேஸ்வரன்,

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது  என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.
வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோசங்களை எழும்பியுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பியே கொழும்பில் குடியேறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
தற்போது இராணுவமும் அரசும் வடக்கில் சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றி வருகின்றது.
யாழ்ப்பாண தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பி கொழும்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையிலும் 1983ம் ஆண்டு கொழும்பிலிருந்த தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் விரட்டியடிக்கப்பட்டனர்.
இதனால் தான் பல தமிழ் மக்கள் தமது உயிர் பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருகின்றனர்.
வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire