samedi 14 décembre 2013

திருநங்கைகள் பற்றி தெள்ளத்தெளிவோம்!

TGதிருநங்கைகள் பற்றி தெள்ளத்தெளிவோம்! காவல் பணிக்கு சிறப்பான தகுதியுடையவர்கள் திருநங்கைகளே என்ற முடிவுக்கு வந்து, பணி நியமணம் செய்திட அரசுக்குப் புரிந்துரை செய்கிறேன். திருநங்கைகளின் சிறப்பு தகுதிகள்! பிறப்பால் ஆண் என்பதால் உடல் வலிமை மிக்கவர்கள். மனதளவில் பெண்களின் குணம் என்பதால் ஓரளவுக்காவது இரக்கக்குணம் இருக்கும். காவல் பணியில் உள்ளோருக்கு ஆணைப் போல உடல் வலிமையும், பெண்ணைப் போலவே இரக்கக் குணமும் அவசியம்தானே! தகுதியின் அடிப்படையில் அனைத்து திருநங்கைகளுக்கும் காவல் பணி என்னும் போது வாரிசு, சொந்த பந்தங்களுக்காக வருவாய்க்கு மிஞ்சிய சொத்தைக் கையேந்தி பிச்சை எடுத்து சேர்க்க வேண்டிய அவசியமேதும் இல்லை. இதனால், பணத்தைக் கொடுத்து அல்லது பாசத்தைக் காட்டி பணிய வைப்பதும் சாத்தியமல்ல. திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்குரிய குடும்ப பொறுப்பு என்னும் சுமை இல்லாததால், காவல் கடமையில் முழு கவனமாய், திறம்பட செயல்பட முடியும். சாதி, மத உணர்வுகள் இருக்காது. இன உணர்வு இருக்கும். ஆனாலும், அதனால் ஆபத்து எதுவும் இல்லை. காவல்துறை உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி. இல்லையென்றால்…? பெண் காவலர்களைப் போல, இவர்களைப் பாதுகாக்க ஆண் காவலர்கள் தேவையில்லை. மனைவி, வாரிசு போன்ற பந்தங்கள் இல்லாததால், திருநங்கைகளின் இறப்புக்குப் பிறகு பெருமளவிலான ஓய்வூதியம் அரசுக்கு மிச்சம். காவலர் என்பதால் சட்ட அங்கீகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைத்து விடும். பணத்திற்காக பாலியல் தொழிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை. இதனால், திருநங்கைகளால் ஏற்படும் பாலியல் தொழில் முற்றிலும் ஒழிந்து விடும். ஒட்டு மொத்தத்தில் பாலியல் தொழில் உடனடியாக பாதியாக குறைந்து விடும். மேலும் விபரமாக ............. திருநங்கைகள் என்றாலே பலருக்கும் பலவிதமாகவே எண்ணத் தோன்றுகின்றன. ஆனால், அப்படிப்பட்ட எண்ணத்தில் ஒருபோதும் உண்மையில்லாமலும் இல்லை. இந்த அவல நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது, அவர்களைப் புறத்தே ஒதுக்கி வைத்துள்ள சமுதாயமும், தங்களை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அறுவெருக்கத்தக்க முறையில் நடந்து கொண்ட திருநங்கைகளும்தான்.
காலம் காலமாக கோசா, ஒன்பது, அலி, அரவாணி என்று பல்வேறு தரப்பட்ட அறுவெருக்கத்தக்க பட்டப்பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தவர்கள், திரு = ஆண்மகன், நங்கை = பெண்மகள் என்ற பொருளில் பொருத்தமானதொரு நற்பெயரை வடிவமைத்து தந்துள்ளனர் சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர்கள்.
திருநங்கைகளைப்பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டுமென்றால், ‘‘பிறப்பால் ஆணாக பிறந்து, பாலின உணர்வைப் பெறும் வயதில் குரோமோசோம் குறைப்பாட்டால் மனதளவில் மட்டும் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்களே திருநங்கைகள்!’’.
திருநங்கைகளைப் பற்றி தற்போது உங்களுக்கு என்ன வெறுப்பு இருக்கிறதோ அதே நிலையில்தான் நானும் இருந்தேன். அவர்களோடு நெருங்கிப்பழகும் நல்லதொரு வாய்ப்பு சென்னையில் இயங்கி வரும் சமூக தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை மையத்திற்குச் சட்ட விழிப்புணர்வு குறித்து பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக 2006 ஆம் ஆண்டில் சென்ற போது ஏற்பட்டது.
இந்த அரிய வாய்ப்பில் இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் விட்டிடுவேனா?
யானை பலம் என்று பலத்திற்கு உண்மையான உதாரணமாக திகழும் யானைக்குத் தனது பலம் பற்றிய தெளிவானதொரு அறிவு இருந்தால், பாகனின் கட்டளைக்குப் பணியுமா அல்லது மனிதனிடம் பிச்சைதான் எடுக்குமா?
அதுபோலவேதான் திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது.
வெகு சிலராகவே உள்ள திருநங்கைகளில் வெகுசிலரிடமே உள்ள சமூக சேவையாற்றல், எழுத்தாற்றல், பரத நாட்டிய ஆற்றல், ஊடகங்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆற்றல் என பல்வேறு பிரபலங்கள் கூட, அப்படியில்லாத தங்களைப் போன்றவர்களின் பலம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்து, அவர்களின் நல்வாழ்விற்காக அரசுக்குப் பரிந்துரைக்காதது மிகவும் துரதிருஷ்டமான ஒன்றே!
அவர்களுக்கே அவர்கள் மீது அக்கறை இல்லாத போது, நாம் எதற்காக அவர்களைப்பற்றி பேச வேண்டும் என்று தோன்றினால் அது தவறு. ஒவ்வொருவரின் பலவீனம் என்னென்ன என்பது அவர்களுக்குத் தானாகவே தெரியவரும். ஆனால், பலத்தை மற்றவர்கள் சொல்லும் போதுதான் அவர்களே உணர முடியும்.
அதுபோலவே, எனது ஆக்கப்பூர்வமான திருநங்கைகளைப்பற்றிய இவ்வாராய்ச்சியின் முடிவில், திருநங்கைகளால் இம்மானிட சமுதாயத்திற்கு மாபெரும் நன்மையும் காத்திருக்கிறது என்பதனையும் ஆனால், இந்நன்மையை நடைமுறைப்படுத்துவது அரசின் பொறுப்பில்தான் உள்ளது என்பதையும் நீங்கள் உணர முடியும்! உங்களைப் போலவேதான் அரசாங்கமும் உணர முடியும்!!
ஆம்! தற்போது தமிழக அரசு பாலியல் தொழிலை ஒழிப்பது குறித்த ஆலோசனைகளை பொது மக்களிடம் இருந்து கோரியுள்ளது. உங்களுக்கு விருப்பமிருந்தால் panelonsexworkers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்றால், பொதுவாக பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள். இது தவறு. ஆண்களின் பங்கேற்பு இல்லாமல் பாலியல் தொழில் நடக்க வாய்ப்பே இல்லை. அறிந்தோ அறியாமலோ பெண்களுக்கு மாற்றாக திருநங்கைகளைத் தேடும் ஆண்களும் பரவலாக இருக்கவேதான் செய்கிறார்கள்.
திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலையை மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி அவர்களுக்கும் -சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சம நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே மனதில் தோன்றியது.
இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களில் ஒரு சிலரையாவது நமது பாணியில் சட்ட ஆராய்ச்சியாளராக்க ஊக்குவித்தேன். ஆனால், பலன் இல்லை.
இவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றத்துக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு விழுப்புரம் கூவாகம் திருவிழாவையொட்டி நடைப்பெற்ற திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவை சட்ட விழிப்புணர்வா? சமூக விழிப்புணர்வா? என்ற பட்டிமன்றத்தில், ‘‘சட்ட விழிப்புணர்வே’’ என்ற அணிக்கு தலைமைப் பொறுப்பேற்று வாதாடினேன்.
அதாவது, நாங்களும் உங்களைப் போன்றே மனிதர்கள்தாம். ஆதலால், எங்களையும் ஆண்கள், பெண்களைப் போலவே மதித்து வாடகைக்கு வீடு கொடுங்கள். வயிற்றுப் பிழைப்புக்கு வேலை கொடுங்கள் என்று சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டிருப்பது என்பது இயலாத காரியம்.
அப்படியே கேட்டும் கிடைக்கவில்லை என்றால் என்ன தீர்வு என்பது கேள்விக்குறிதான். இவைகளுக்கான சட்டத்தைக் கொண்டு வந்து விட்டால், எல்லாமே எளிதாகி விடும் என்ற ஆணித்தரமான வாதத்தை முன் வைத்தேன்.
அதே சமயம் எனக்கு சரி நிகர் சமமாக எதிர் அணியில் பேச நண்பர் திரு.வீ.செ.கருப்பண்ணன் என்கிற ஓய்வு பெற்ற மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் ஆர்வத்துடன், திருநங்கைகளைப் பற்றிய தகவல்களை இணையத்தில் இருந்து சேகரிக்க, ஏற்கனவே நான் வைத்திருந்த ஆய்வு முடிவுடன் புது தகவல்களையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்து தீர்க்கமான முடிவுக்கு வந்தோம்.
இப்படி செய்ததற்கு மேலும் ஒரு முக்கிய காரணமும் உண்டு. சட்ட ஆராய்ச்சியாளர் என்ற முறையில் நான் வாதாடுவது ஒருபுறம் இருக்க, காவல்துறை அதிகாரி என்ற பொறுப்புணர்வோடு பேசினால் அது குறித்த செய்தி அரசுக்குப் போகும். அரசும் பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கையில், ‘‘சமூக விழிப்புணர்வு’’ என்ற தலைப்பில் அவரையே பேச வலியுறுத்தினேன்.
அவரும் சிறப்பாக பேசினார். திருநங்கைகள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. அதுவும், அத்தோடு சரி! அதன் பின்னர் அவர்களே கூட அக்கருத்துக்களை ஏறெடுத்தும் பார்க்க வில்லை.
இறுதியில், சமுதாயத்திற்காகத்தான் சட்டம்; சட்டமில்லாமல் சமுதாயமும் இல்லை என்று தீர்ப்பும் திருநங்கைகளைப் போலவே இரண்டும் கெட்டான் தனமாகவே எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி நடுவரால் சொல்லப்பட்டது. இதை சொல்வதற்கு ஒரு பட்டிமன்றமா? அதற்கு ஒரு நடுவர் தேவையா?
சமுதாயத்தின் பழுதை நீக்கவல்ல, தீர்க்கவல்ல பாரம்பரியம் மிக்க பட்டிமன்றங்கள் எல்லாம் பொழுது போக்கும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தேடும்,  கூலிக்கு மாரடிக்கும் வெட்டி மன்றங்களாகி விட்டன.
சமுதாயத்தில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்களும் மனிதர்களே, மதிக்கப்பட வேண்டியவர்களே என்ற நிலை மாறி, ‘‘போகப் பொருளாகவும், கேலிக்குரிய நபர்களாகவும், ஆண்களின் பாலியல் உணர்வுகளுக்கு, வித்தியாசமான முறையில் விதம் விதமாக விருந்தளிக்கும் நபர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்’’.
அந்த அளவிற்கு அச்சு மற்றும் ஒளி&ஒலி ஊடகங்கள், தங்களின் அறியாமையாலும், விற்பனைக்காகவும் திருநங்கைகளைப் பற்றி கண்ணும் காதும் வைத்து படிக்கப் படிக்க இனிக்கும் வகையில் முன்சொன்னபடியெல்லாம் அவர்களிடம் நாமும் தவறாக நடந்து கொள்ளலாம் என்கின்ற அளவில் தவறான செய்திகளை துணிந்து வெளியிடுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் திருநங்கைகளால் நம்மை என்ன செய்து விட முடியும்? என்ற மனிதாபிமானம் இல்லாத செயல் என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் அப்படி எழுதுவதெல்லாம் உண்மையா? என்று நீங்கள் திருநங்கைகளிடமே கூட வெளிப்படையாக கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாத மற்றும் தங்களின் சுயநலத்தால் அவர்களே கூட, அதுபற்றி வெளிப்படையாக சொல்ல இயலாத அவல நிலையுமே இன்று வரையிலும் உள்ளது.
திருநங்கைகள் குறித்த எனது ஆய்வில் நானறிந்த உண்மைகள்:
* பிறப்பால் ஆண் மகனாக பிறந்து, குரோமோசோம் குறைப்பாட்டால் பாலின உணர்வைப் பெறும் வயதில், மனதளவில் பெண்ணாக பருவமாற்றம் அடையும் போது அவர்களின் பிறப்பு உறுப்பு மீதே வெறுப்பு உண்டாகி, பின் முறையான ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை அல்லது முன்னோர் அனுபவத்தின் மூலம் உறுப்பை நீக்கி விடுவார்கள்.
* உண்மையான ஆணுக்கு உறுப்பை நீக்கி விட்டால், அவருக்கு அத்தோடு சங்கூதிவிட வேண்டியதுதான். ஆனால், இவர்களுக்கு இவ்விடயத்தில் இறப்பு விதிவிலக்காக இருக்கிறது.
* மனதளவில் பெண்ணுக்குரிய ஆசைகள் இயல்பாகவே வந்து விடுவதால், பெண்களைப் போலவே ஆடை, அலங்காரம் ஆகியவற்றை செய்து கொள்வார்கள். பொதுவாக பெண்கள் ஆடை அலங்காரத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
* திருநங்கைகளோ ஆண் என்ற உடம்பில், பெண்ணுக்குரிய உணர்வுகளை அடக்கி வைத்திருந்து, அதிலிருந்து விடுதலையடைந்து சுதந்திரமாக பெண் தன்மையை பிரதிபலிப்பதால், ஆடை, அலங்காரங்கள் ரொம்பவே ஓவராக இருக்கும். நாம் பார்க்க அருவெறுப்பாகவும், அகங்காரம் கொண்டவர்களாகவுமே தோன்றும்.
* சமுதாயத்தின் புறக்கணிப்பில் வயிற்று பிழைப்புக்கும், தனது காம உணர்வுக்கும் பாலியல் தொழில்தான் என்று முடிவு செய்து விடும் திருநங்கைகள், அதற்கு வசதியாக தனது ஆணுறுப்பை அகற்றிய அதே இடத்தில் பெண்ணினத்திற்கே உரிய அலங்கார தொனியில் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுறுப்பு போல ஜோடித்துக் கொள்வார்கள். அவ்வளவுதான்.
இதனாலேயே இவர்கள் பெண்ணாக மாறி விட்டதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளது கொடுமையிலும், கொடுமை. இதுபோலவே, திருநங்கைகளின் தொண்டைக்குள் முடி முளைக்கிறது. அதற்காக அவர்கள் ……… என்ற செய்திகள் எல்லாம் அதீத கற்பனையே.
* இந்த விபரம் தெரியாது அவர்கள் மீது ஆசையுள்ள ஒரு சில ஆண்கள்தான், பாலியலுறவுக்கு அழைப்பார்கள். ஆக, இதுவும் ஒரு ஹோமோ செக்ஸ் முறைதான்.
* பல ஆண்களுக்கு இதுபற்றிய விபரம் மிகத்தெளிவாக தெரியாது குழப்பத்தில் இருப்பதால், திருநங்கைகளுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், பயத்தில் நமக்கேன் வீண் வம்பு என்று கண்டும் காணாமல் போய் விடுவார்கள்.
பெண் தன்மை குடி கொண்டிருப்பதால், இயல்பாகவே இவர்களின் மார்பகமும் பருவ வயது பெண்களைப் போலவே கொஞ்சம் பெரிதாகி விடும். அப்படியே ஆகவில்லை என்றாலும் கூட, மருத்துவ முறையில் குறிப்பிட்ட அளவிற்கு பெரிதாக்கி விடுகிறார்கள். எக்காரணம் கொண்டும் பெண்களுக்கு இருப்பது போன்று சராசரியாகவோ அல்லது கண்டபடியெல்லாமோ பெரிதாக்க முடியாது.
மனதளவில் பெண் தன்மை குடி கொண்டிருப்பதால் எதிர்பாலினமான ஆண்களின் ஆதரவுதான் அவர்களுக்குத் தேவைப்படும் என்பதால்தான், ஆண்களைச் சீண்டுவார்கள்.
* பெண்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். பெண்ணாக பிறப்பவர்கள் எவரும் ஒருபோதும் திருநங்கையாக மாறுவதில்லை.
*  இது புரியாத பெண்கள், தங்களைச் சீண்டாததை கருத்தில் கொண்டும் அவர்களின் வளர்ச்சி அடைந்த மார்பகத்தை மனதில் கொண்டும், திருநங்கைகள் பெண்ணினத்தைச் சார்ந்தவர்கள் என நினைப்பதும் உண்டு. இதுவும் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைதான்.
* திருநங்கைகளால் பெண்களின் கற்புக்கு எந்த வித ஆபத்தும் கிடையாது. ஆனால், ஆண்களின் கற்புக்கும், பாலியல் உணர்வுகளுக்கும் திருநங்கைகளாலும், திருநங்கைகளின் கற்புக்கும்,  பாலியல் உணர்வுகளுக்கும் ஆண்களாலும் ஆபத்து உண்டு.
*  பெண்களைப் போலவே, திருநங்கைகள் ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஊடகச் செய்தியைக் கொண்டு பலரும் நினைக்கிறீர்கள். இது முற்றிலும் தவறு.
* திருமணத்தின் முக்கிய நோக்கமே ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்டப்படியான உடலுறவு மற்றும் பெண்ணுக்கு குழந்தைப் பேறு என்பதுதான். பிறப்பால் ஆண் மகனான திருநங்கைக்கு, பெண்களைப் போல் கர்ப்பப்பை கிடையாது. அதனால், இவர்கள் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்ற பேச்சுக்கும் இடமில்லை.
* இவர்கள் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள சட்டப்படியான வழிமுறைகள் ஏதும் இல்லை. அப்படி திருமணம் செய்து கொண்டால் அது ஒன்று ஹோமோ அல்லது லெஸ்பியன் அல்லது மனித இனம் மிருக இனத்துடன் கொள்ளும் உடற்புணர்ச்சி என்ற வகை பாலியல் உறவாக கருதியே, இச்செயலை இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 377 இன்கீழ், இயற்கைக்கு மாறான புணர்ச்சி என்ற வகையில் தண்டிக்கத்தக்க குற்றமாக அறிவுறுத்துகிறார்கள்.
*  ஆனாலும், பாலியல் ஆர்வத்தாலும், திருநங்கைகளின் உடற்கூறு பற்றிய உண்மைகள் தெரியாமல் ஊடகச் செய்திகளை நம்பி இளைஞர்கள் பலர் திருநங்கைகளைத் திருமணம் செய்து கொள்ள  முனைகிறார்கள். ஒரு சிலர் இப்படிச் செய்வதை சாதனையாகவும் கருதுவது உண்டு. எது எப்படி இருந்தாலும், இம்முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் கூட, பாலியல் ரீதியாக எதுவுமே நம்மால் செய்ய முடியாது எனத் தெரிந்ததும் கை விட்டு விட்டு ஓடி விடுவார்கள்.
* தாங்கள் பிறப்பால் ஆண் என்பதை மறந்து பாலியலுக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்புக்கு ஆணைத்தேடும் திருநங்கைளின் பலவீனத்தால், இவர்களின் உழைப்பில் உண்டு களித்து, குடித்து கும்மாளமிடும் கொழுத்த ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சினிமா என்ற கற்பனை உலகில் காலடி எடுத்து வைக்க நினைத்து ஊரை விட்டு ஓடி வந்தவர்கள்.
திருநங்கைகள் இயற்கையாக எவ்வளவு பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள் என்பதை இப்போது உணர்ந்திருப்பீர்கள். உடற்கூறில்தான் இப்படியென்றால், குடியிருப்பு, வேலை வாய்ப்பு என எதைத் தொட்டாலும் அவர்களுக்குப் பிரச்சினைதான்.
இந்த அவலம் அடிப்படையில் மாற்றப்பட வேண்டும் என்றால், முதலில் அரசாங்கமே அவர்களைச் சமூகம் அங்கீகரிக்கும் வகையில் அரசுப்பணியில் அமர்த்த வேண்டும். இதிலும் காவல்துறை பணியே  மிகமிகச் சரியானதாகும். ஏன்? எப்படி?
ஆண் காவலர்களால், பெண்களுக்கு ஏற்படும், பாலியல் ரீதியான பிரச்சனைகளைக் களைய கொண்டு வரப்பட்டதே பெண் காவலர்கள் பணி நியமனம். ஆனாலும், ஆங்காங்கே ஆண் காவலர்களால் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பெண் காவலர்களின் ஒத்துழைப்பும் தாராளமாகவே இருக்கிறது.
மேலும், இக்கற்பு சூறையாடல் ஆண், பெண் காவலர்களுக்கு உள்ளேயே ரகசியமாக ஒருபுறம் நடந்தேறிக் கொண்டும்தான் இருக்கிறது. ஆனால், அவை பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளிப்படுவது இல்லை.
இதற்கிடையிலும், பெண் காவலழகி காமக்காதலியை நிரந்தரமாக கைப்பிடிக்க போவது யார் என்ற போட்டா போட்டி சச்சரவில், ஆண் காவலர்கள் நாயைப் போல தெருவில் அடித்துக் கொண்டு கட்டிப்புரண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இச்சம்பவத்தால் அவமானமுற்ற ஆண் காவலர்களின் மனைவியோ அல்லது பெண் காவலர்களோ தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிறையவே இருக்கின்றன.
இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டும், மறைமுகமாக ஒத்துக் கொண்டும் பணியில் பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி விசாரணைக் குழுவை நியமித்தது; புகார்தாரர்களை கூவிக்கூவி அழைத்தது. ஆனாலும், புகார் தர பெண் காவலர்கள் முன்வரவில்லை. காரணம், உங்களுக்கு தெரிந்ததுதான்..!
மேலும், பெண்களின் புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு அழைக்கப்படும் ஆண்களின் கற்புக்கும், சுய மரியாதைக்கும் உத்திரவாதம் ஏதும் இல்லை என்பதை நானே சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் கண்கூடாக பார்த்தும் உள்ளேன்.
பெண்களின் பாதுகாப்பிற்காக காவல் பணியில் ஈடுபடும் பெண்காவலர்களுக்கு மத்தியில், ஆங்காங்கே ஆண் காவலர்களும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இது ஏன் என்பது குறித்து யோசனை செய்திருக்க மாட்டீர்கள். பணியில் ஈடுபட்டுள்ள மூன்று பெண் காவலர்களின் பாதுகாப்பிற்காகவே ஒரு ஆண் காவலர் பணியில் அமர்த்தப்பட வேண்டிய கொடுமையும் உள்ளது.
எனவே, காவல் பணியில் பெண்களை அமர்த்திய திட்டத்தால் பிரச்சினை பலவாறாக கூடியுள்ளதே ஒழிய குறையவில்லை. காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் ஆசா பாசங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட தியாகியாக இருக்க வேண்டும். அப்போதுதான், எதற்கும் பயப்படாமல் எந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால் இவர்களோ, ‘‘பொண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி, பணம், பாசம், போதை என எத்துனை விதமான ஆசா பாசங்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் ஆசைப்படும் அல்பமாக, அடிமைகளாக அல்லவா இருக்கிறார்கள்?’’
இத்தனை ஆசா பாசங்களையும் அனுபவிக்க பொருளாதாரத்திற்கு எங்கே போவார்கள்? அதற்காகத்தான் மக்களிடம் கையேந்தி லஞ்சப்பிச்சை எடுக்கிறார்கள். அதிகாரத்தின் அநாவசிய மிரட்டலுக்கு அடிபணிகிறார்கள். பயப்படுகிறார்கள்.
காக்க வேண்டியவர்களைக் காயப்படுத்தி, காவலில் அடைக்கிறார்கள். மாறாக, அப்படி செய்ய வேண்டியவர்களின் காலில் விழுந்தும் கிடக்கிறார்கள்.
மற்றவர்களைப் போல, பிரச்சினைகளை சொல்வது, புலம்புவது நமது தொழில் அல்ல. மாறாக, அதை எப்படி களையலாம் என ஆராய்ச்சியின் அடிப்படையில் தீர்வு சொல்வதுதான் நமது கடமை.
அந்த வகையில் காவல் பணிக்கு சிறப்பான தகுதியுடையவர்கள் திருநங்கைகளே என்ற முடிவுக்கு வந்து, பணி நியமணம் ட அரசுக்குப் புரிந்துரை செய்கிறேன்.
திருநங்கைகளின் சிறப்பு தகுதிகள்!
பிறப்பால் ஆண் என்பதால் உடல் வலிமை மிக்கவர்கள்.
மனதளவில் பெண்களின் குணம் என்பதால் ஓரளவுக்காவது இரக்கக்குணம் இருக்கும்.
காவல் பணியில் உள்ளோருக்கு ஆணைப் போல உடல் வலிமையும், பெண்ணைப் போலவே இரக்கக் குணமும் அவசியம்தானே!
தகுதியின் அடிப்படையில் அனைத்து திருநங்கைகளுக்கும் காவல் பணி என்னும் போது வாரிசு, சொந்த பந்தங்களுக்காக வருவாய்க்கு மிஞ்சிய சொத்தைக் கையேந்தி பிச்சை எடுத்து சேர்க்க வேண்டிய அவசியமேதும் இல்லை.
இதனால், பணத்தைக் கொடுத்து அல்லது பாசத்தைக் காட்டி பணிய வைப்பதும் சாத்தியமல்ல.
திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்குரிய குடும்ப பொறுப்பு என்னும் சுமை இல்லாததால், காவல் கடமையில் முழு கவனமாய், திறம்பட செயல்பட முடியும்.
சாதி, மத உணர்வுகள் இருக்காது. இன உணர்வு இருக்கும். ஆனாலும், அதனால் ஆபத்து  எதுவும் இல்லை.
காவல்துறை உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி. இல்லையென்றால்…?
பெண் காவலர்களைப் போல, இவர்களைப் பாதுகாக்க ஆண் காவலர்கள் தேவையில்லை.
மனைவி, வாரிசு போன்ற பந்தங்கள் இல்லாததால், திருநங்கைகளின் இறப்புக்குப் பிறகு பெருமளவிலான ஓய்வூதியம் அரசுக்கு மிச்சம்.
காவலர் என்பதால் சட்ட அங்கீகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைத்து விடும். பணத்திற்காக பாலியல் தொழிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை.
இதனால், திருநங்கைகளால் ஏற்படும் பாலியல் தொழில் முற்றிலும் ஒழிந்து விடும். ஒட்டு மொத்தத்தில் பாலியல் தொழில் உடனடியாக பாதியாக குறைந்து விடும்.
அடேங்கப்பா, திருநங்கைகள் விசயத்தில் அவர்களுக்கே தெரியாத இவ்வளவு பலமான சமாச்சாரங்களா? என பெருமூச்சு விட்டு சோர்ந்து விடாதீர்கள். ஆராய்ச்சியின் அடிப்படையில் மறுக்க முடியாத சான்றுகளைத் திரட்டுதல் என்றால் எப்படி ஆணித்தரமானதாக திரட்ட வேண்டுமென உணர்ந்து கொள்ளுங்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire