dimanche 29 décembre 2013

பதவி நீக்கம் பி.பி.சி சிங்கள சேவைத் தலைமை ஊடகவியலாளர் லியனகே

lyanageபிபிசி சிங்கள சேவையின் பொறுப்பாளரான பிரியத் லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிங்கள சேவை ஊடகவியலாளர்கள் ராஜபக்ச அரசு சார்பாகச் செயற்படுவதாகவும், இலங்கை அரசின் ஊடகவியலாளர்களுக்கான கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் விளைவாக பி.பி.சி இன் உயர் மட்டவிசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பி.பி.சி உலக சேவையில் ‘முற்றுப் பெறாத யுத்தம்’ என்ற இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த ஆவணம் ஒன்றை பிரான்சிஸ் ஹரிசன் என்ற ஊடகவியலாளர் தயாரித்து வழங்கியிருந்தார். இந்த ஆவணத்திற்கு எதிரான செய்தித் தொகுப்பு ஒன்றை இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர். ருவான் வணிகசூரியவின் சிக்கலுக்குரிய கருத்துக்களுடன் லியனகே வெளியிட்டார். இந்த செய்தித்தொகுப்பு நீக்கப்பட்டுள்ள அதே வேளை பிரியத் லியனகேயும் பதவியிழந்துள்ளார்.
இந்த நீக்கலின் பின்னர் சிங்கள மொழி பேசாத டிஜான் ரட்ஜொவிக் என்பவர் சிங்கள சேவையின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.                                                             நன்றி;இனியொரு

Aucun commentaire:

Enregistrer un commentaire