mercredi 6 avril 2016

மக்கள் பணங்களிள் பாதுகாப்புக்காக103 இராணுவத்தினரும், 103 பொலிஸாரும் அவருக்கான பாதுகாப்பு ஒருபோதும் குறைக்கப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புக்காக 103 இராணுவத்தினரும், 103 பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்றும், அவருக்கான பாதுகாப்பு ஒருபோதும் குறைக்கப்படவில்லை என்றும் அரசு இன்று அறிவித்தது.
மஹிந்தவுக்கான இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம், இந்தியாவில் கறுப்புபூனை பாதுகாப்பு பயிற்சிபெற்ற பிரிவினரும் வெளியேறவேண்டிவரும்.   இப்படி பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால் மஹிந்தவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி தினேஷ் குணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான லக்
ஷ்மன் கிரியல்ல மேற்கண்டவாறு கூறினார்.`` மஹிந்தவின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆனால், அவரது ஆட்சிகாலத்தில் பொன்சேகாவின் பாதுகாப்பு 5 நிமிடங்களில் பறிக்கப்பட்டது. நாம் ப்படி செய்யமாட்டோம். அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவோம்'' என்றும் அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire