vendredi 29 avril 2016

ரெலோ கட்சி தமிழரசுக்கட்சிக்கு எதிராக களம் இறங்கியது



தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட
உபதலைவராகவும் தமிழரசு கட்சியின் பிரச்சார பணிகளில் முழுவீச்சில் செயற்பட்டுவந்த திரு பொன்காந்தன் அவர்கள் அண்மையில் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்ததோடு அதன் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறீதரன் அவர்களையும் கடுமையாக சாடியிருந்திருந்தார்.

இந்த நிலையில் அதனை வாய்ப்பாக பயன்படுத்திகொண்ட பங்காளிக்கட்சியான ரெலோ கட்சி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பொன்காந்தனை அவர்களது கட்சிக்குள் உள்வாங்கியுள்ளதாக கிங்டொத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பொன்காந்தனை இன்று கட்சிக்குள் உள்வாங்கும் முகமாக கிளிநொச்சிக்கு வந்திருந்த ரெலோக் கட்சி தலைவரும்  பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தலைவருமான செல்வம் மற்றும் அந்த கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ மற்றும் ஏனைய கழக அங்கத்தவர்களோடு கலந்துரையாடும்போதே செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் பொன்காந்தனை கட்சிக்குள் உள்வாங்கியுள்ளதோடு அவரை மற்றும் செல்வம் அடைக்கலநாதனின் கிளிநொச்சிமாவட்ட இணைப்பாளராகவும் நியமிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்காந்தன் அவர்கள் கடந்தகால தேர்தல்களில் கூட்டமைப்பு வெற்றிக்காக தனது பேச்சாற்றல் மூலம் கடுமையாக பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டதோடு சம்பந்தரையும் புகழ்பாடி கவிதை எழுதியிருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.

அண்மை காலமாக ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை தமிழரசுக்கட்சி தனது கட்சிக்குள் கபளீகரம் செய்திருந்தமையால் ஏனைய கட்சி உறுப்பினர்களிடையே கடும் விமர்சனம் எழுந்திருந்த நிலையில். தமிழரசுக்கட்சிக்கு எதிராக ரெலோ களம் இறங்கியிருப்பது த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே பரபரப்பை உண்டுபண்ணியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.


Aucun commentaire:

Enregistrer un commentaire