vendredi 1 avril 2016

பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாய்ஸ் விருது கமலஹாசனின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி

இந்திய சினிமாவில் நடிகர் கமலஹாசனின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் சினிமாத்துறையில் சிறப்பாக செயல்படும் பிரபலங்களுக்கு பிரான்ஸ் திரைப்பட ஆவண காப்பாளர்களின் முன்னோடியான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. 
இந்த விழாவில் பிரான்ஸ் நாட்டு திரைப்படத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். விருது பெற்றது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள கமலஹாசன் தனது குரு அனந்த் மூலமாக ஹென்றி லாங்லாய்ஸ் சாதனைகள் குறித்து அறிந்ததாகவும், இந்த விருதை தாம் வாங்கிய செய்தியை கேட்க அனந்த் இருந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire