vendredi 1 avril 2016

தமிழகத்தின் தலித் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர் சிவகாமி. நேர்மையானவர், யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்ற பெயரெடுத்தவர் அதிரடியாக திமுக்காவில்


பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து
சமூக சமத்துவ படை அமைப்புக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 12 தொகுதிகளை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது சிவகாமி, ஒரு தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
தடித்த எழுத்துக்கள் சொல்லப்பட்டவைக்கு அழுத்தம் தர என்னால் இடப்பட்டவை . சுதந்திரத்திற்குப் பிறகு நூற்றுக் கணக்கில் சாதிக் கலவரங்கள் வெடித்து, தலித்துகள் வாழும் குடிசைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. தலித் குடும்பங்கள், பெண்களும், குழந்தைகளுமாக கொலை செய்யப்படுகின்றன அல்லது தீயில் பொசுக்கப்படுகின்றன.. இக்கலவரங்களில் தலித்துகளை கொடுமைப்படுத்துவது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக, அரசினால் பட்டியலிடப்பட்டு அரசின் ஆதரவு பெற்ற சாதிகளைச் சேர்ந்த மக்கள் தான். அவர்களுக்கு எதிராக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது. கழகங்கள் தொடங்கிய சமூக நீதி எனப்பட்டதும் சாதி ஒழிப்பு எனப்பட்டதும், உண்மையிலேயே நீதியும் சாதி ஒழிப்புமாக இருந்திருப்பின், இந்த வன்முறைகள் நாளடைவில் குறைந்து வந்திருக்க வேண்டும். அல்லது அரசு உடன் தலையிட்டு இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கவேண்டும்..
law_students“அனைத்துச் சாதிக் கொடுமைகளுக்கும், தீண்டாமைக்கும் காரணமாக விருப்பது பாப்பனீயம் தான் என்று அம்பேத்கர் வெகு தீர்மானமாகச் சொல்லியிருந்தாலும், நாம் கண்முன் காணும் யதார்த்தங்களும், இன்றும் கிராமங்களில் நிலவும் உண்மைகளும், அம்பேத்கரின் வாசகங்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் உண்மையை அறிந்துகொள்ள தடையாயிருக்கின்றன.  தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அத்தனைக்கும் பொறுப்பாக இருப்பது பிற்படுத்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் தான்.  எனவே, தலித்துகளின் அரசியல் போராட்டத்திற்கான உடனடித் தேவை, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எதிராகப் போராடுவது தான். ஆனால், இத்தேவை தான்,  பிற்படுத்தப் பட்ட சாதி மக்களும், தலித்துகளும், ஒடுக்கப்பட்டோரும், சிறுபான்மை இனத்தவரும், ஒன்று திரண்டு,   பார்ப்பனருக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கிக்கொள்வதற்கு தடையாக இருக்கிறது.  தலித்  அரசியல் பற்றி அம்பேத்கரின் தூரதிருஷ்டிப் பார்வை அளித்த தீர்மானமான முடிவுகளுக்கு  எதிராக இந்த வாழ்க்கை எதார்த்தம் நம் பார்வையை மறைத்துக்கொண்டு நிற்கிறது.”

Aucun commentaire:

Enregistrer un commentaire