dimanche 24 avril 2016

ரோபோக்களுடன் வருகிறது அமெரிக்க கடற்படை சிறிலங்கா


us-train-sln (6)வடக்கில் குளங்கள், கடலேரிகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வெடிபொருட்களை அகற்றும் பணியில், சிறிலங்கா கடற்படையுடன் அமெரிக்கக் கடற்படையும் ஈடுபடவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வாரஇதழ் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள அவர், குளங்கள், கடலேரிகள் போன்ற நீர்நிலைகளில் கைவிடப்பட்டுள்ள, வெடிபொருட்களை அகற்றுவதற்கு அமெரிக்க  கடற்படையின் ரோபோ தொழில்நுட்பமும் பயன்படுத்தவுள்ளது.
இதற்கென, அமெரிக்க கடற்படை யின் சிறப்புக் குழுவொன்றும் சிறிலங்கா வரவுள்ளது.
சிறிலங்கா கடற்படையினருக்கு, அமெரிக்க கடற்படையினர் இரண்டு கட்டங்களாக, நீருக்கு அடியில் காணப்படும் வெடிபொட்களை அகற்றும் பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.
கடந்த ஆண்டு  செப்ரெம்பர் மாதத்தில் சிறிலங்கா வந்த அமெரிக்க கடற்படையின் சிறப்புக் குழுவொன்று, கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பாக ஒரு வாரகாலம், சிறிலங்கா கடற்படையின் சுழியோடிகளுக்குப் பயிற்சிகளை அளித்திருந்தது.
அதேபோன்று இந்த மாதம் முதல் வாரத்தில், சிறிலங்கா கடற்படையின் 20 பேர் கொண்ட குழுவினருக்கு குவாமில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில், 10 நாள் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அமெரிக்க கடற்டையினரிடம், பயிற்சி பெற்ற சிறிலங்கா கடற்படையினரும், அமெரிக்க கடற்படையினரும்,இணைந்தே, வடக்கில்  நீர் நிலைகளில் கைவிடப்பட்டுள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிறப்பு  தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியா் அட்மிரல் பியல் த சில்வா இந்த நடவடிக்கைக்குத் தலைமை தாங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire