dimanche 24 avril 2016

ஈழக் கொள்கையைத் தோற்கடிக்க முடியாமற்போனதாக ஜனாதிபதி

maithiri-6யுத்தத்தைத் தோற்கடிக்க முடிந்த போதிலும் ஈழக்கொள்கையைத் தோற்கடிக்க முடியாமற்போனது
யுத்தத்தை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சத்தத்தினால் தோற்கடிக்க முடிந்த
 போதிலும், ஈழக் கொள்கையைத் தோற்கடிக்க முடியாமற்போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியாமற்போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜெனீவா பிரேரணையும் பொருளாதார நெருக்கடியுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலை 2 வருடங்கள் முன்னதாகவே நடத்துவதற்குப் பிரதான காரணங்களாக அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது இந்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு அரசியல் கட்சியொன்று தேவை எனவும் அரசாங்கத்தை அமைப்பது பற்றிப் பேசுவது முக்கியமில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சிறந்த கட்சியாக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்விடயங்களைத் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire