dimanche 3 avril 2016

இலங்கை அரசாங்கத்திடம் 1828 கோடி இழப்பீடு கோரும் சீன நிறுவனம்

கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு திட்டத்தை மேற்கொண்டு வரும் சீன நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் ஆயிரத்து 828 கோடி ரூபாவை இழப்பீடாக கோரியுள்ளது.
அல்லது இழப்பீட்டுக்கு பதிலாக துறைமுக நகர நிர்மாணிப்பில் கூடுதல் நிலப்பரப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் நிறுவனம் கேட்டுள்ளது.
நகர நிர்மாணிப்பு பணிகள் தாமதமாகியுள்ளதன் காரணமாவே நிறுவனம் அரசாங்கத்திடம் இந்த இழப்பீட்டை கோரியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகள் பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் போது உயர் மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire