mardi 10 mai 2016

தேசிய விலங்காக காட்டெருமை

​அமெரிக்காவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள காட்டெருமை
அமெரிக்க காட்டெருமையை அந்நாட்டு தேசிய விலங்காக அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க காட்டெருமை தொடர்ந்து எண்ணிக்கையில் குறைந்து வருவதாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க காட்டெருமையின் பாரம்பரியம், அவற்றினால் கிடைக்கும் பொருளாதாரம் போன்றவை குறித்து அதிக கவனம் செலுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து அமெரிக்க காட்டெருமையை தேசிய விலங்காக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார். 

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மிஸ்ஸிஸிப்பி மாநிலம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் லட்சக்கணக்கில் இருந்த காட்டெருமை தற்போது பெருமளவில் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது.  

Aucun commentaire:

Enregistrer un commentaire