dimanche 29 mai 2016

உடல் உறுப்பு தானம் செய்வதால் மற்றவருக்கு பரிசாக அளிக்க முடியும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், வாரத்திலும், மாதத்திலும் என்னென்ன மாற்றங்கள் காண்கின்றன என உங்களுக்கு தெரியுமா?


தானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்பார்கள். ஆனால், உண்மையிலேயே சிறந்தது உடல் உறுப்பு தானம். இவ்வுலகில் விலைமதிப்பற்ற பொருள் ஒன்று இருக்கிறது எனில், அது நமது உயிர் தான். எத்தனை பொன், பொருள் கொடுத்தாலும் இதை வாங்க முடியாது.
அப்படிப்பட்ட இந்த உயிரை, உடல் உறுப்பு தானம் செய்வதால் மற்றவருக்கு பரிசாக அளிக்க முடியும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், வாரத்திலும், மாதத்திலும் என்னென்ன மாற்றங்கள் காண்கின்றன என உங்களுக்கு தெரியுமா?

தெரிந்துக் கொள்ளுங்கள், தெரிந்துக் கொண்டு மண் தின்னும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முனையுங்கள்...
நீங்கள் இறந்த மறுநொடியே உங்கள் மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும்.
உங்கள் உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு செல்கிறது.
ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மெல்ல, மெல்ல உங்கள் உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும். பிறகு உடைய ஆரம்பித்து, வெளியேற ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக ஆரம்பிக்கிறது.
கால்சியம் தசைகளில் பில்ட் அப் ஆக துவங்குவதால், தசை இறுக்கமாக, கடினமாக மாறும்.
சில சமயங்களில் தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும்.
தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும்.
புவி ஈர்ப்பு, இறந்தவர்களின் இரத்தத்தை கீழ் நோக்கி இழுக்கும். இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்.
இறந்தவர்களின் உடலில் ஆங்காங்கே பச்சை நிற தடிப்புகள் தோன்றும். இதற்கு காரணம், உடல் உறுப்புகளில் இருக்கும் என்ஸைம்கள் அதுவாக செரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் பாக்டீரியாக்கள்.
உடல் அழுகும் போது ப்யுட்ரெஸைனை, காலரா நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள் வெளியேறும். இதன் காரணத்தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
புழுக்கள், வண்டுகள் இறந்தவரின் உடலை உண்ண ஆரம்பிக்கும். புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும்.
மெல், மெல்ல இறந்தவரின் உடல் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும். இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.
ஓரிரு வாரத்தில் இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும்.
நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி, வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire