dimanche 29 mai 2016

சரியான தகவல்கள் கிடைக்கப்படவில்லை.இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார் இவரது பிறப்பை பற்றி;


லி சிங்-யோன், சீனாவை சேர்ந்த இவர் உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவராக கருதப்படுகிறார். இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறப்பை பற்றி இன்றுவரையும் சரியான தகவல்கள் கிடைக்கப்படவில்லை.
சிலர் இவர் 1736-ம் ஆண்டு பிறந்தார் எனவும், சிலர் வரலாற்று கூற்றுப்படி பார்க்கையில் இவர் 1677-ம் ஆண்டே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். எப்படி வைத்து பார்த்தாலும் இவரது வயது 197 அல்லது 256- ஆக இருக்க வேண்டும்.
இரண்டில் எது இவரது வயதாக இருந்தாலும், இவர் தான் அதிக வயது வாழ்ந்த நபராக கருதப்படுவார். இவர் இறக்கும் முன், இவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கான இரகசியமும் கூறி சென்றிருக்கிறார்...
பத்து வயதில் மூலிகையாளராக தன் துறையை தேர்ந்தெடுத்து பயணத்தை துவங்கிய லி சிங்-யோன். நாற்பது வருடங்கள் goji berries, lingzi, wild ginseng, he shou wu, gotu kola, மற்றும் rice wine போன்ற மூலிகை உணவுகளை உண்டு வந்துள்ளார். இதையே இவர் நூறு வயது வரை கடைபிடித்து வந்தார் எனவும் கூறப்படுகிறது.
1749-ம் ஆண்டு இவரது 71வது வயதில் இவர் சீன இராணுவத்தில் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் நபராக சேர்ந்துள்ளார்.
இவர் 23 திருமணங்கள் செய்திருந்தார், இவருக்கு 200 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் தான் உலகின் வயதான நபர் இல்லை என்றும், ஒருமுறை லீ ஏறத்தாழ 500வருடங்கள் வாழ்ந்த நபரை சந்தித்ததாக கூறியிருக்கிறார் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
அந்த நபர் தான் இவருக்கு Qigong பயிற்சி மற்றும் சிறப்பு மூலிகை டயட் கற்பித்தார் எனவும், அதன் மூலமாக தான் இவர் அசாதாரண நீண்ட ஆயுள் வரை வாழ முடிந்தது எனவும் கூறப்படுகிறது.
இறக்கும் முன்னர் லீ-யிடம் அவரது ஆயுள் இரகசியம் பற்றி கேட்டப்போது, ஆமை போல அமர வேண்டும், புறா போல நடக்க வேண்டும், நாய் போல உறங்க வேண்டும், இதயத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.
சீன அரசின் வரலாற்று கோப்புகளில், லீயின் 150வது (1827) மற்றும் 200வது (1877)பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விடயங்கள் இருக்கின்றன என கூறப்பட்டுள்ளன. இதை சீனாவின் செங்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வூ என்பவர் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
1933-ம் ஆண்டு வெளிவந்த டைம் பத்திரிக்கையின் பிரதியில் இவர் 197 வயது வாழ்ந்ததாகவும். இவரது பத்தாவது வயதில் இருந்தே கன்சூ, ஷான்ஷி, திபெத், சியாம் மற்றும் மஞ்சூரியா போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire