dimanche 8 mai 2016

வடகொரிய அணு ஆயுத குறைப்பு தயாராக இருப்பதாக கிம் யொங் உன் கூறியுள்ளார்


_N-Korea-leaderசர்வதேச நியமங்ககளுக்கு நேர்மையான வகையில் ஒத்துழைப்பு வழங்கவும் உலகளாவிய அளவில் அணு ஆயுத பரவலை குறைப்பதற்கும் வட கொரியா தயாராக இருப்பதாக கிம் யொங் உன் கூறியுள்ளார். 36 ஆண்டுகளின் பின் இடம்பெறும் 7ஆவது ஆளும் தொழிற் கட்சி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்றைய (சனிக்கிழமை) அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி, சமீபத்தில் நடத்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெகுவாக பாராட்டியுள்ளார். அத்துடன், வட கொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேர்ந்தால் மாத்திரமே அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவோம் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், “வடகொரியா தனது 5 ஆவது அணுகுண்டு ஏவுகணை பரிசோதனைக்கு தயாராகி வருவதாக அமெரிக்க தெரிவித்திருப்பதையடுத்து சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது. இந்த நிலையில், எங்கள் நாட்டு இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேர்ந்தால் மாத்திரம்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவோம்” என வடகொரியா ஜனாதிபதி கிம் யொங் உன் கூறியுள்ளார்.
ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று அந்நாட்டுமக்களிடையே உரையாற்றிய அவர், அணு ஆயுதங்களை கைவசம் வைத்துள்ள, பொறுப்புகள் மிகுந்த நாடு என்ற வகையில், தங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தி மூர்க்கத்தனமாக பிறநாடுகள் தாக்குதல் நடத்த வந்தால், அதன் மூலம் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேர்ந்தாலன்றி, நாங்களாக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்’ என குறிப்பிட்டார்.


Aucun commentaire:

Enregistrer un commentaire