vendredi 20 mai 2016

பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா கப்பலில் நிவாரணப் பொருட்களை அனுப்பியது


'ரோனு' புயலினால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது. 

கொச்சியில் இருந்து ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சட்லெஜ் கப்பல்கள் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்கிறது என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐஎன்எஸ் சட்லெஜ் கப்பல் ஏற்கனவே கொச்சியில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றுவிட்டது என்றும் ஐஎன்எஸ் சுனைனா விரைவில் புறப்படும் என்றும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரோனு புயல் இலங்கை கடற்கரை பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கையில் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது, மேலும் 133 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் காரணமாக இந்தியாவில் ஒடிசா மற்றும் ஆந்திராவில் மழை பெய்து வருகிறது. புயல் வங்காளதேசம் நோக்கி செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire