vendredi 30 novembre 2012
வெளிநாட்டில் உழைத்த பணத்தை முதலீடு செய்வோருக்கு வரிச்சலுகை
வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கை யர்களுக்கு இங்கு தாம் உழைத்த பணத்தை இங்கு முதலீடு செய்வதற்காக 5 வருட கால வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி வெளிநாட்டில் தொழில்புரிந்து உழைத்த பணத்தை முதலீடு செய்வதினூடாக கிடைக்கும் இலாபத்திற்கு வருமான வரி, தேசத்தை கட்டியெழுப் பும் வரி, பெறுமதி சேர்வரி என்பன அறவிடாது சலுகை வழங்கப்படும். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு கூடுதல் பங்களிக்கும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் மூலம் 2011ல் 5.2 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்
மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள மாணவர்களே கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது. பல்கலைக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள கலகா சந்தியில் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சுலோக அட்டைகளுடன் பெரும்பாலான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த முதலாவது ஆர்ப்பாட்டமாகும். இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கைவையாதே!, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து! போன்ற சுலோகங்களுடன் போராட்டம் நடைபெற்றது. புலம் பெயர் நாடுகளில் இது வரை நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று இந்த மாணவர் எழுச்சியையும் இனவாதப் போராட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்காமல் மாணவர்களின் நலன் சார்ந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் போராட்டமாக ஆதரவுப் போராட்டங்கள் நடத்தப்படும் என எதிர்பார்போம். தலைவர் மேலேயா கீழேயா என்ற ஆராச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சரி, சிங்கள மாணவர்கள் போராடினார்கள் என்று கேள்விப்பட்டாலே சிறீலங்கா அரசாங்கத்தை விட அதிகம் ஆத்திரமடையப் போவது புலம் பெயர் கனவான்கள் தானே!
மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள மாணவர்களே கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது. பல்கலைக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள கலகா சந்தியில் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சுலோக அட்டைகளுடன் பெரும்பாலான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த முதலாவது ஆர்ப்பாட்டமாகும். இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கைவையாதே!, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து! போன்ற சுலோகங்களுடன் போராட்டம் நடைபெற்றது. புலம் பெயர் நாடுகளில் இது வரை நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று இந்த மாணவர் எழுச்சியையும் இனவாதப் போராட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்காமல் மாணவர்களின் நலன் சார்ந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் போராட்டமாக ஆதரவுப் போராட்டங்கள் நடத்தப்படும் என எதிர்பார்போம். தலைவர் மேலேயா கீழேயா என்ற ஆராச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சரி, சிங்கள மாணவர்கள் போராடினார்கள் என்று கேள்விப்பட்டாலே சிறீலங்கா அரசாங்கத்தை விட அதிகம் ஆத்திரமடையப் போவது புலம் பெயர் கனவான்கள் தானே!
பலஸ்தீனத்திற்கு வெற்றி.தனிநாடு கோரும் வாக்கெடுப்பில்
இஸ்ரேலின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் பலஸ்தீன இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு நாடாக அங்கீகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் 41 நாடுகள் பங்கேற்கவில்லை.
இதன்படி உறுப்புரிமையில்லா கண்காணிப்பாளர் நாடாக பலஸ்தீனத்தை ஐநா அங்கீகரிக்க அதன் பொதுச் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது தனி நாடு கோரும் பலஸ்தீனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பு முடிவு மூலம் இரு நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பலஸ்தீனத் தலைவர் மொஹமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வாக்கெடுப்பானது சமாதான முனைப்புக்களை பின்னடையச் செய்யும் என இஸ்ரேல் பிரதிநிதி கூறியுள்ளார்.
பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் ரமல்லா நகரில் பாரியளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்
சுமார் 6000 பேர் இன் நாட்டின் சொத்துகளை கொள்ளையிடும் குழுவினர்களாக கணிக்கமுடியும்.சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இன்று நாட்டில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. நாட்டின் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. நாடடை ஆட்சி செய்பவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களது நண்பர்களுமாக சுமார் 6000 பேர் இன் நாட்டின் சொத்துகளை கொள்ளையிடும் குழுவினர்களாக கணிக்கமுடியும். இராணுவத்தில்; சுமார் 300 பேர், பொலிஸில் சுமார் 500 பேர், அரச சேவையில் சுமார் 2000 பேரும் இவர்களில் அடங்குவர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சாதாரண மக்களுக்கு மோட்டார் சைக்;கிள் ஒன்றைக் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும் போது 6000 இலட்ச ரூபா பெறுமதியுள்ள பந்தயக் கார்களை இறக்குமதி செய்கின்றனர். இவை யாருக்காக? ஏன சரத் பொன்சேகா கேள்வியெழுப்பினார்.
நேற்று மாலை கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று மாலை கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய பிக்கு முன்னணி ஒழுங்கு செய்த இப் பொதுக் கூட்டம் கண்டி எட்மன் சில்வா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய பிக்கு முன்னணி நாடளாவிய ரீதியில் நடத்திவரும் கூட்டத் தொடரில் இது இரண்டாவது கூட்டமாகும்.
இங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சோகா,
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்கள் பத்துப் பேரிடம் பேசினால் அதில் எட்டுப் பேர் எமக்கே வாக்களித்ததாகக் கூறுகின்றனர். ஆனால் வெற்றி எமக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எமது வெற்றி கொள்ளையடிக்கப்பட்டமையாகும்.
சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு என்பன அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனையும் அரசியல் ஆதரவு பெற்றவர்களே செய்கின்றனர். இவற்றைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. நாங்கள் நிச்சயமாக அதிகாரத்துக்கு வந்து இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம்.
பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியாமல் செய்மதி ஒன்றை அனுப்புகின்றனர். இதற்கான பணத்தை யார் கொடுப்பது. இவ்வாறு வீண் விரையம் செய்யும் பணத்தைக் கொண்;டு பல மாதங்களுக்கு ஏழைகளுக்கு உதவி செய்ய முடியும்
அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் 2015 ஆம் ஆண்டு வரை பெற்றுக் கொள்ளும் கமிஷன் தொகையின் பெறுமதி 15 இலட்சம் மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு மில்லியன் என்றாலே பயமாக உள்ளது.
இன்றைய அரசாங்கம் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் மக்களுக்கு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று இல்லாததன் காரணமாக அவர்கள் ஆட்டம் கண்டுள்ளனர். எமக்கு தற்போது தேவைப்படுவது ஒரு சக்திவாய்ந்த பொது எதிர்க் கட்சியாகும். நான் இதற்காக பலமுறை பலருக்கும் அழைப்பு விடுத்தேன். சிலர் பொது எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க பயப்படுகின்றனர்.நான் இன்றும் வேண்டிக் கொள்வது தத்தமது தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் விடுதலைக்காகவும் மக்கள்pன் சுதந்திரத்திற்காகவும் பொது எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க ஒன்று சேருங்கள் என்றார்.
jeudi 29 novembre 2012
யாழ்தேவியுடன் ஆட்டோ மோதி பெரும் கோரம்
யாழ்தேவி’ ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அந்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஏழு பேர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். அம்பன்பொல, கிரிமிட்டியாவ பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் நான்கு சிறார்களும், கண வன், மனைவி மற்றும் அவரது நண்பியும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். கிரிமெடியாவ பிரதேசத்திலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதியான பியகம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யு. எம். உதய ஆசிரி விஜேகோன் என்பவர் தனது மனைவி மகள் மற்றும் மகனுடன் தனது குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான பெண் மற்றும் மேலும் 2 பிள்ளைகளையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அமுனுகம பிரதேசத்தில் வசிக்கும் தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஏழு பேரும் நேற்று நெலும்பத் வெவ பிரதேசத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். குறித்த முச் சக்கர வண்டி கிரிமெட்டியாவ பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த யாழ்தேவி ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்பாராத விதத்தில் ரயிலில் மோதுண்ட முச்சக்கர வண்டி பாரிய சத்தத்துடன் சுமார் 300 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதில் அந்த முச்சக்கர வண்டியில் இருந்த ஏழு பேரும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்துச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலைமையை ஏற்படுத்தியது. ரயிலுடன் மோதுண்ட முச்சக்கர வண்டி முற்றாக சுக்கு நூறாகி யுள்ளது.
இதில் சிலர் ஸ்தலத்தில் உயிரிழந் துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்து விழுந்து கிடந்த நிலையில் பிரதேசவாசி களினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், எந்தவித பலனும் இன்றி அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
புலிகளின் குழுக்கள் தோன்றியிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் விடுதலைப்புலிகளின் குழுக்கள் தோன்றியிருப்பதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது.
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி ஆகிய விடுதிகளில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ருந்த புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவினர் குறித்த விடுதிகளை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் புலிகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் நபர்கள் இராணுவ விசாரணைகளை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
அங்கு நடந்த சகல சம்பவங்களையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள கணனி மூலம் புலிகளின் அணியொன்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் திவயின கூறியுள்ளது.
செவ்வாயில் விரைவில் குடியேற்றம்
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும் அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று சாதனை படைத்தது இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். முதல் கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்தும் வசதிகளுடன் ‘பால்கன்-9’ விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் ஈடுபட்டுள்ளது. சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடி கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். அங்கு குடியேறுவோர், சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார்
13வது திருத்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை
தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவு செய்யப்படும் வகையிலும் அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கிய பின்னரே 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென பிரதி பொருளாதார அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 13 வது திருத்தத்தினூடாக எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத போதும் அதனை ஒரேயடியாக ரத்துச் செய்ய முடியாது. முதலில் அதற்கு மாற்றுத் தீர்வொன்று காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண கொண்டுவரப்பட்ட13 ஆவது திருத்தத்தை ஒரேயடியாக மாற்ற முடியாது. முதலில் அதற்கு மாற்aடாக வேறு தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும் வகையில் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கிய பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்.
பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவு குழுவின் ஊடாக உரிய தீர்வை காண்பதே சிறந்த வழியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதில் தாமதமின்றி பங்குபற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுக்களிற்கு நீண்ட வரலாறு உண்டு. சிக்கலான பிரச்சினைகளுக்கு உகந்த முறையில் தீர்வு காண்பதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. எனக்கும் அவ்வாறான குழுக்களில் ஈடுபட்ட நீண்ட அனுபவம் உண்டு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்..
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய சிரேஷ்ட அரசியல் விவகார அதிகாரி ஹிடோகி டெனுடனான சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை நீதி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
‘பல கட்சிகளை சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் வித்தியாசமான சிந்தனை போக்குள்ளவர்களும் இருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கால தாமதம் நிலைமையை சிக்கலாக்கும். இதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான விரிசல் அதிகரித்து துருவப்படுத்தல் தீவிரமடைய கூடும். இதனால் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதுவே சிறந்த வழியாகும்.
அதனால் நாடாளுமன்ற தெரிவு குழுவில் கலந்துகொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை காலதாமதம் இன்றி ஏற்றுக்கொள்வதே உசிதமானது. அதற்கு இணங்காமல் விடுவது நிலைமையை மேலும் சிக்கலாக்க கூடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சில நிபந்தனைகளை விதிக்க முன்வந்தனர்.
ஏற்கெனவே அரசாங்கத்துடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை விட்ட இடத்திலிருந்தே தொடரவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பினர். முஸ்லிம் தரப்பையும் இந்த பேச்சுவார்த்தையில் உள்வாங்க அவர்கள் இணங்கவில்லை. அரசாங்கத்தோடு அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்துவதால் முஸ்லிம்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசிக்கொள்ளலாம் என்கின்றனர்.
இனப்பிரச்சினையை தீர்வை நோக்கிய எத்தகைய பேச்சுவார்த்தைகளிலும் மூன்றாம் தரப்பாக முஸ்லிம்களின் பரிமாணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்த நாட்டு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையை பெற்றுள்ள எனது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
பொதுவாக நாடு முழுவதிலும் பரந்தும் குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செறிந்தும் வாழும் முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிட்டு இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக் கூடியதும் நிரந்தரமானதுமான தீர்வை காண இயலாது.
அத்துடன் இனப்பிரச்சினையுடன் தொடர்பான முன் அனுபவமுடைய தென் ஆபிரிக்கா போன்ற நாடொன்றின் மத்தியஸ்தமும் பெரிதும் வரவேற்கத்தக்கதாக கருதப்படுகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தையும் வழிமுறையையும் அதற்கான கால அட்டவணையையும் ஜனாதிபதி விஷேட செயலணி இனங்கண்டுள்ளது.
அதனடிப்படையில் முக்கிய விதந்துரைகள் காலக்கிரமத்தில் படிப்படியாக செயல்படுத்தப்படவுள்ளன. இரு வகையினரான தமிழ் சிறைக் கைதிகள் உள்ளனர். வெவ்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் போதிய சாட்சியங்களும் சான்றுகளும் அற்ற நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களும் உள்ளனர்.
தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நான்கு விஷேட மேல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.தற்பொழுது கடமையாற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை நூறு பேர் வரை அதிகரிப்பது பற்றி நீதிச் சேவைகள் ஆணைக்குழு கவனம் செலுத்துகின்றது.
நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை துரிதமாக விசாரித்து அவற்றுக்கான தீர்ப்புகளை வழங்குவதற்குரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதித்துறையை பொறுத்தவரை புதிய சட்டங்கள் இயற்றப்படுவதோடு சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அரசியல் அதிகாரி ஜூங் ஹூவான் லீஇ நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலநதுகொண்டனர்.
2013ஆம் அடுத்த ஆண்டு இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகார திணைக்கள உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மெனின் விஜயத்திற்கு முன்னோடியாகவே இவர்களது வருகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திmercredi 28 novembre 2012
கே.பி : புலிகளின் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்து விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
கனடா, சுவிட்சர்லாந்து, மலேசியா, பிரிட்டன்,நோர்வே, சுவீடன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் காணப்படும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளார்.
அதிகளவான சொத்துக்கள் கனடாவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்பொருள் அங்காடிகள், வாகன விற்பனை நிலையங்கள், குத்தகை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மக்களுடைய சொத்துக்களை மக்களுக்கானதாக அறிவிக்காமல் முடக்கி வைத்திருக்கும் கே.பி உட்பட புலம்பெயர் மாபியா குழுக்கள் இனிமேல் அவற்றை இலங்கை அரசிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவர்கள் காலம் தாழ்த்தாமல் சொத்துக்களை மக்கள் சொத்தாக அறிவிப்பார்களானால் இனக் கொலையாளிகளிடம் சொத்துக்கள் சென்றடைவதை தவிர்க்கலா
ஹக்கீம்.13ஆவது திருத்தத்தை நீக்க விடமாட்டோம்
13ஆவது திருத்த சட்டத்தை நீக்குவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
"ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்கின்றனர். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது" என அவர் குறிப்பிட்டார்.
இவர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான கட்சித் தலைவர்கள் ஆளும் அரசாங்கத்தினுள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கைகோர்த்து வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இஸ்லாமிய புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட முஹர்ரம் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற காலி அலிப் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச ஆகியோர் கூறிவருவதைப் போல அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்ள போவதுமில்லையும் ஆதரவாக கை உயர்த்த போவதுமில்லை.
அதிகாரம் பண்முகப்படுத்தப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கத்திற்கும் பகிர்வுக்கும் ஊடாக கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்பாடு நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு பயனளிக்கக் கூடியவாறு 13ஆவது திருத்தத்திலே உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் அது இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற காரணத்தினால் வேறு விமர்சன பார்வை இருந்து வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்திற்கு உள்ளும் புறமும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.
அதற்கான போராட்டத்தில் நாம் அரச தரப்பிலும் கட்சித் தலைவர்கள் சிலருடன் ஓர் உடன்பாட்டுடன் உள்ளோம். 13ஆவது திருத்தம் மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் சிலரிடம் காணப்படுகின்றது.
சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றவர்கள் மட்டும் தான் இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் அல்லர். அவர்களின் போக்கிற்கு மாற்றமான நிலைப்பாட்டை உடைய என்னை போன்ற இன்னும் பல கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் அரசாங்கத்துக்குள்ளே அவ்வாறான ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
இதற்கு முன்னர் சுமார் 850 மில்லியன் ரூபா செலவில் காலியில் நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமையவுள்ள இடத்தையும் நீதியமைச்சர் ஹக்கீம், பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்.
சிறிலங்காவின் முதல் செயற்கைக்கோள்
சிறிலங்காவின் முதலாவது செயற்கைக்கோள் சுப்ரீம் சற் நேற்று சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
சீனாவின் இரு அரசுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து சிறிலங்காவின் தனியார்துறை நிறுவனம் ஒன்று இந்த செயற்கைக்கோளை வானில் செலுத்தியுள்ளது.
சிறிலங்கா நேரப்படி, நேற்று பிற்பகல் 4.43 மணியளவில் இந்த செயற்கைக்கோளைத் தாங்கிய ஏவுகலம் சீனாவின் சி சங் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் சொந்தமாக செயற்கைக்கோளை வைத்திருக்கும் மூன்றாவது நாடாகவும், உலகில் 45 வது நாடாகவும் சிறிலங்கா இருப்பதாக கூறப்பட்டுள்ள போதும், இது சிறிலங்கா நிறுவனத்துக்கு முழுமையாகச் சொந்தமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது
சீனாவின் இரு அரசுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து சிறிலங்காவின் தனியார்துறை நிறுவனம் ஒன்று இந்த செயற்கைக்கோளை வானில் செலுத்தியுள்ளது.
சிறிலங்கா நேரப்படி, நேற்று பிற்பகல் 4.43 மணியளவில் இந்த செயற்கைக்கோளைத் தாங்கிய ஏவுகலம் சீனாவின் சி சங் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் சொந்தமாக செயற்கைக்கோளை வைத்திருக்கும் மூன்றாவது நாடாகவும், உலகில் 45 வது நாடாகவும் சிறிலங்கா இருப்பதாக கூறப்பட்டுள்ள போதும், இது சிறிலங்கா நிறுவனத்துக்கு முழுமையாகச் சொந்தமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது
சந்தர்ப்பவாதிகள் சிங்களவர்கள் என்கிறார் சந்திரிகா!
எனது ஆட்சிக்காலத்தின் போது பல சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தேன், நான் கட்அவுட்களை வைத்து கொண்டு, வீண் கதைகளை பேசி கொண்டிருக்கவில்லை என்பதால், சிலர் என்னை மறந்து விட்டனர். சிங்களவர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மறந்து விடும் பழக்கம் உள்ளவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவை வறுமை காரணமாக ஏற்படுவதில்லை. சமூகத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இதற்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹொரகொல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது, உயர்தர வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் வாரத்தில் சில மணிநேரங்கள் மாத்திரமே பள்ளிக்கு செல்கின்றனர்.
மீதமுள்ள நேரங்களில் அவர்கள் பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் படித்த காலத்தில் ஆசிரியர்கள் பாடசாலையில் வைத்து கொண்டே எமக்கு கற்பித்தனர். நாங்கள் பகுதி நேர வகுப்புகளுக்கு சென்றதில்லை எனவும் சந்திரிக்கா கூறியுள்ளார்
புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என்றது அமெரிக்கா !
தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. புலிகளின் சொத்து விபரங்கள் பற்றி தகவல் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினருக்கும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இலங்கை நிதிப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டி.கே. விஜேசூரிய மற்றும் சிரேஸ்ட துணைப் பணிப்பாளர் சிசிர ரணசிங்க ஆகியோருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது புலிகளின் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஒப்புக் கொண்டார் என விக்கிலீக்ஸ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதனிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் உலக நாடுகளின் நிதிப் புலனாய்வுப் பிரிவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி புலிகளின் சொத்து விபரங்களை பட்டியலிட்டு, அவற்றை முடக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக 7 மாணவர்கள் வைத்தியசாலையில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா – தெரிவித்தார்.
பேரணியில் ஈடுபட முயற்சித்தவர்களை பொலிஸார் கலைக்க முற்பட்ட போது அதற்கு செவிசாய்க்காத மாணவர்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டனர். இதனால் அவர்களை பலவந்தமாக விரட்டியடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.
இதேவேளை, மாணவர்களைக் கலைப்பதற்காககச் சென்ற பொலிஸாரின் ஒத்துழைப்புக்காகவே இராணுவமும் அப்பகுதிக்குச் சென்றது என்று யாழ். இராணுவ தலைமையகம் - கூறியது.
mardi 27 novembre 2012
தீவகத்தை மையமாகக் கொண்டு ஏழு துறைகளின் அபிவிருத்திக்கு இந்தோனேஷிய நிறுவனம் முன்வருகை!
தீவகத்தை மையமாகக் கொண்டு ஏழு துறைகளில் பெரும் அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன. இதற்கு இந்தோனேஷிய நிறுவனமான பி.ரி.பனோறோமா என்ற நிறுவனம் ஜனாதிபதியிடம் அனுமதியைப் பெற்றுள்ளது என்று நிறுவனத் தலைவர் வா. இராசையா தெரிவித்துள் ளார்.
தீவகம் தெற்குப் பகுதியில் உல்லாசத்துறை, கைத்தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம், மீன்பிடி ஆகிய துறைகளில் முன்னிறுத்தி இந்தக் கலப்பு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கு இது தொடர்பாக விரிவான எண்ணக்கரு பத்திரம் வழங்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
தீவகம் தெற்கு கடலை மையமாக வைத்து முன்னெடுக்கும் பெரிய அபிவிருத்தி திட்டத்துக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்வரும் கரையோரம் பேணல் முகாமைத்துவ திணைக் களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் 5 ஆண்டுகளை மையமாக வைத்து இந்தத் திட்டம் நகர்த்தப்படவுள்ளது. தீவக, யாழ். கலப்பு அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் அடுத்த ஜனவரியில் முன்னெடுக்கப்படும். இதேவேளை, இந்தோனேஷிய உட்கட்டுமான நிபுணர்களின் ஆலோசனை பெறப்படவுள்ளது. என்றார்.
இதன் முதற்கட்டமாக பி.ரி.பனோறோமா நிறுவனத் தலைவர் வா.இராசையா தலைமையிலான ஜப்பான் குழு உல்லாசத்துறை, கைத்தொழில் துறை, வேலைவாய்ப்பு, கல்வி, பயிற்சி, விவசாயம், மீன்பிடித் துறை தொடர்பாக யாழ்.ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. கடல்வளம் சார்ந்த துறைகளையும் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இதேவேளை, யாழ்.கலப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, முதலீட்டு சபை தலைவர், மத்திய சுற்றாடல் அமைச்சு ஆகியோரின் விசேட கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்ட
குடும்ப ஆட்சி நிச்சயமற்ற நிலையில் தனியார் துறையினர்
கொழும்பு கடற்கரையோரங்களில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் தொடக்கம், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் புதிய உந்துருளிகள்
மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் வரையான பல்வேறு புதிய உற்பத்திப் பொருள்களின் பயன்பாடு, இலங்கை அறிவித்தது போன்று ஆசியாவின் தற்போதைய முன்னணிச் சந்தையாக கொழும்பு மாறிவருவதைக் காண்பிக்கின்றது.
ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் கூட இங்கே தனியார் முதலீடுகள் போதியளவில் மேற்கொள்ளப்படவில்லை. பொருளாதாரத் துறையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தனியார் முதலீடு என்பது போதியளவில் காணப்படவில்லை.
2009இல் போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையின் வெளிநாட்டுச்சந்தை முதலீடானது 17வீதம் வளர்ச்சியடைந்துள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்தளவு வளர்ச்சியை எட்டவில்லை. கடந்த ஆண்டில் இலங்கைக்குக் கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீடானது ஒரு பில்லியன் டொலர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள போதிலும், இது அவ்வளவு போதுமானதல்ல என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கைக்குக் கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீடானது 300 மில்லியன் டொலர் எனவும் 2005 இல் இருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது மிகக் குறைவானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் உத்தியோகபூர்வப் புள்ளிவிவரம் தொடர்பான நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் இடையில் உண்மையான மீள் இணக்கப்பாட்டைக் கொண்டு வருவதில் இலங்கை ஜனாதிபதி பின்னிற்பதே பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் பிரதானமானது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முக்கிய அமைச்சுப் பதவிகளையும், திணைக்களங்களையும் ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கலாக 70 வீதம் ராஜபக்ஷ சகோதரர்களால் ஆளப்படும் அமைச்சுக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதியின் மூத்த மகன் தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய் யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கொண் டுள்ள தற்போதைய நாடாளுமன்றின் சபாநாயகராகவும் ஜனாதிபதியின் மூத்த சகோதரன் பதவி வகிக்கிறார்.
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்களானது மிகச் சிலரின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது' என இலங்கையின் பிரதான அரசியற்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார விவகார பேச்சாளர் ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளான போதிலும், சில பெரிய விடுதிகள் தவிர வேறெந்தப் பயனுள்ள முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை' என ஹர்சா டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா தொடக்கம் இந்தியா வரை ஒவ்வொரு நாட்டிலும் குடும்ப அரசியல் காணப்படுகிறது.
இதே போன்று நானும் எனது உறவினர்களும் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றோம்.இது குடும்ப அரசியலாகக் காணப்படுகின்ற போதிலும், மக்கள் எங்களை விரும்பியே தேர்வு செய்துள்ளனர்' என ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேர்காணல் ஒன்றில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றைய நாடுகளில் ஆட்சியிலுள்ளவர்கள் தாமாகவே தீர்மானத்தை எடுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் உடனடியாக வெற்றியைப் பெறுகின்றனர். ஆனால் எமது நாட்டைப் பொறுத்தளவில் தீர்மானங்கள் எடுப்பதானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீர்மானம் இயற்றுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன' எனவும் பஸில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வர்த்தகத் துறையில் இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்களும் அதிக செல்வாக்கையும் அதிகாரத்தையும் கொண்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
'வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அமைச்சுக்களில் பெரும்பாலானவற்றை ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். இதுவே நாம் தற்போதுஎதிர்நோக்கும் பிரச்சினையாகும்' என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார்.
கடன் வழங்குநர்கள் மற்றும் தனது நட்பு நாடான சீனா போன்றவற்றிடமிருந்து பெருமளவான கடன்களை இலங்கை ஜனாதிபதி பெற்றுக் கொள்கிறார். இதுவே தற்போதைய நேரடி வெளிநாட்டு முதலீடாகக் காணப்படுகிறது. ஆனால் இது நீண்டகால அடிப்படையில் நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியல்ல எனப் பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மந்தம், மந்தம்
ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் துரித கட்டுமான அபிவிருத்தியானது, ஏனைய போரின் பின் மீண்டெழும் நாடுகளை விட இலங்கை அபிவிருத்தியடைவதைக் காண்பிக்கின்ற போதிலும், உள்நாட்டில் இதன் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே உள்ளன.
தனியார் மற்றும் பொதுத்துறைகளின் நடவடிக்கைகளில் இலங்கை அரசானது குழப்பத்தை விளைவித்து நாட்டில் முதலாளித்துவத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதையே தற்போதைய அறிகுறிகள் காண்பிப்பதாக Pathfinder Foundation என்ற பொருளியல் ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு மற்றும் தனியார், பொதுத்துறையினரின் பங்களிப்பு தொடர்பில் தெளிவான வரையறை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது' என லக்ஸ்மன் சிறிவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் வாழும் இலங்கையில் வடக்கிலுள்ள யாழ்ப்பாணமானது இரண்டாவது பெரிய நகரமாகவும், பொருளாதார மையமாகவும் காணப்பட்டது. 1983இல் ஆரம்பமான ஆயுதப் போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இலங்கையில் நீண்டகாலம் தொடர்ந்த போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளதும் தெரிந்ததே. இலங்கையின் வடக்கில் வாழ்ந்த மக்கள் தென்பகுதிக்கு பிரயாணம் செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.
தற்போது மெதுமெதுவாக யாழ்ப்பாணம் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. தற்போது தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பஸ்கள் பயணிக்கின்றன.அத்துடன் விமானம் மூலமும் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பெருமளவான காணிகளை இலங்கை இராணுவம் சுவீகரித்துள்ளதாக இங்கு வாழும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
இங்கு நடைபெறும் உள்ளூர் தேர்தல்கள் மற்றும் ஏனைய நாளாந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்வதானது மீண்டும் இனக்குழப்பத்தை ஏற்படுத்தக் காலாக உள்ளதாகவும் உள்ளுரில் வாழும் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதில் தயக்கம் காண்பிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதலில் சேதமாக்கப்பட்ட தனது பெற்றோரின் வீட்டைத் திருத்தி அதில் வர்த்த நடவடிக்கையை ஆரம்பிக்கும் நோக்குடன் போரின் இறுதியில் இளம் தமிழ் வர்த்தகரான வி.கந்தப்பா பிரிட்டனிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்திருந்தார்.
நிச்சயமற்ற நிலையில் தனியார் துறையினர்
இனிவருங் காலங்களில் என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பில் தனியார் துறையினர் நிச்சயமற்றுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது முதலீடுகளை மேற்கொள்வதில் மக்கள் அச்சங்கொள்கின்றனர் என கந்தப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தவர்கள் விடுதிகள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவற்றை நடத்துவதானது கொழும்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 43 மாடிகளைக் கொண்ட Hyatt Regency என்ற விடுதி பகுதியளவில் இலங்கை அரச காப்புறுதி நிறுவனத்தால் ஆளப்பட்டாலும் இதனை இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் காமினி செனரத்தே நடத்தி வருகிறார்.
இந்தவிடுதி கட்டப்பட்டுள்ள நிலம் கடந்தஆண்டு பஸில் ராஜபக்ஷ அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக்காணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகரஅபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதாகும். நகர அபிவிருத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலராக இலங்கை ஜனாதிபதியின் பிறிதொரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷ பணிபுரிகிறார். இலங்கை இராணுவத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரமும் பாதுகாப்பு அமைச்சுக்கே உள்ளது.
ஜனாதிபதியின் பெயரைக் கொண்டுள்ள மிகின் லங்கா மற்றும் Helitours போன்ற விமான சேவைகளையும் இலங்கை அரசு நடத்துகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் விமானப் படைத் தளபதி ஆகிய இருவரும் இணைந்து மிகின் லங்கா சேவையை ஆரம்பிப்பதென திட்டமிட்டனர்.
இதே போன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் அரசுக்குச் சொந்தமானதாகும். தற்போது இதனை ராஜபக்ஷவின் மைத்துனர் நடத்தி வருகிறார். எரிபொருள் விலையேற்றம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் குறைத்து அறவிடப்பட்டமை போன்ற காரணங்களால் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை கடந்த ஆண்டில் 14 மில்லியன் டொலர்களை இழந்ததாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்ததிலிருந்து நாட்டில் மேற்கொள்ளப்படும் மின்சக்தி, தொலைத் தொடர்பாடல், வீதிப் புனரமைப்புக்கள் போன்றன துரித அபிவிருத்தியடைந்துள்ளதாகவும், மகிந்த சிந்தனையின் வெற்றியை இந்த அபிவிருத்திப் பணிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில துறைகள் மக்களுக்கு முக்கியமானவையாகும். இவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இவற்றின் அதிகாரங்களை அரசு எடுத்துக் கொள்ளாவிட்டால் எங்களால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது' என பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்
நியூயோர்கில், மத்திய வங்கி கட்டடம் 50 இலட்சம் டொலருக்கு கொள்வனவு:
நியூயோர்க் நகரில் 12,000 சதுர அடி தரையைக் கொண்ட கட்டடத்தை மத்திய வங்கி 50 இலட்சத்து 75,000 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது என்று பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியினால் நியூயோர்க் நகரில் கொள்வனவு செய்யப்பட்ட கட்டடம் தொடர்பான கொடுக்கல் வாங்;கல்கள் சரியாக கணக்கு வைக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரட்னவின நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது இந்த கட்டடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு 68000 அமெரிக்க டொலர் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாணயச் சபையின் கணக்காய்வுக்குழு அறிக்கையில் இந்த கொடுக்கல் வாங்கல்கள் காட்டப்படவில்லை என விக்கிரமரட்ன எம்.பி சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் அமுனுகம மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முதலீடு என்பதால் அது ஆண்டறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இனிவரும் மத்திய வங்கி அறிக்கையில் இதுபோன்ற கொள்வனவுகள் தவறாமல் பதியப்படும் எனவும் அமைச்சர் அமுனுகம உறுதியளித்தார்
இலங்கை மத்திய வங்கியினால் நியூயோர்க் நகரில் கொள்வனவு செய்யப்பட்ட கட்டடம் தொடர்பான கொடுக்கல் வாங்;கல்கள் சரியாக கணக்கு வைக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரட்னவின நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது இந்த கட்டடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு 68000 அமெரிக்க டொலர் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாணயச் சபையின் கணக்காய்வுக்குழு அறிக்கையில் இந்த கொடுக்கல் வாங்கல்கள் காட்டப்படவில்லை என விக்கிரமரட்ன எம்.பி சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் அமுனுகம மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முதலீடு என்பதால் அது ஆண்டறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இனிவரும் மத்திய வங்கி அறிக்கையில் இதுபோன்ற கொள்வனவுகள் தவறாமல் பதியப்படும் எனவும் அமைச்சர் அமுனுகம உறுதியளித்தார்
lundi 26 novembre 2012
இலங்கையில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - வாசுதேவ
இலங்கையில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பல மொழி அறிவுடன், சகோதர இனங்களுடன் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பணிகளை பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதால், பாடசாலைகளை இனரீதியாக பிரிக்கக் கூடாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு ஒன்றின் இருப்புக்கு நல்லிணக்கம் என்பது முக்கியமானது. மூன்று மொழிகளின் பணியாற்றுவதன் மூலம் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இலங்கையின் பிரதான மொழிகள் சிங்களமும், தமிழுமாகும். இந்த இரண்டு மொழிகளை கற்பதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.ஷிரானி பண்டாரநாயக்க
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என பிரதம நீதிரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல்வாதிகள் தம்மை விசாரணைக்கு உட்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறியடித்து விசாரணைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விசாரணை நடாத்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சார்பற்ற சுயாதீனமான தரப்பினரிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதி விசாரணை நடாத்தும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அச்சமின்றி விளக்கமளிக்கப் போவதாக பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்
நூற்றுக்கணக்கான சிறார்களை சீரழித்த பாலியல் குற்றவாளி சிறிலங்காவில்.......கவனம்...
அவுஸ்ரேலியாவில் நூற்றுக்கணக்கான சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கத்தோலிக்கத் திருச்சபையின் முன்னாள் அருட்சகோதரர் நியுசிலாந்தில் இருந்து சிறிலங்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நியுசிலாந்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேனாட் கெவின் மக்கிராத் என்ற முன்னாள் அருட்சகோதரர், மீது நியுகாசில் நீதிமன்றத்தில் 252 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர் 1970,80களில் நியுசவுத்வேல்சில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட அமைப்புகளில் டசின் கணக்கான சிறார்களை வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இவரை நியுசிலாந்தில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளை நியுசவுத்வேல்ஸ் காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், நியுசிலாந்தில் இருந்து வெளியேறிய அவர் சிறிலங்காவில் தஞ்சடைந்துள்ளார்.
மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் அவர் தங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
7 -15 வயதுக்கிடைப்பட்ட 9 சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக, பேனாட் கெவின் மீதான 22 குற்றச்சாட்டுகள் 2006ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து,அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாகவும் சிறிலங்கா மாறத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நியுசிலாந்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேனாட் கெவின் மக்கிராத் என்ற முன்னாள் அருட்சகோதரர், மீது நியுகாசில் நீதிமன்றத்தில் 252 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர் 1970,80களில் நியுசவுத்வேல்சில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட அமைப்புகளில் டசின் கணக்கான சிறார்களை வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இவரை நியுசிலாந்தில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளை நியுசவுத்வேல்ஸ் காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், நியுசிலாந்தில் இருந்து வெளியேறிய அவர் சிறிலங்காவில் தஞ்சடைந்துள்ளார்.
மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் அவர் தங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
7 -15 வயதுக்கிடைப்பட்ட 9 சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக, பேனாட் கெவின் மீதான 22 குற்றச்சாட்டுகள் 2006ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து,அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாகவும் சிறிலங்கா மாறத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இன விவசாயிகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் தொடர்ந்தும் ஈடுபடுவதை அனுமதிக்க வேண்டாம்.சிவநேசதுரை சந்திரகாந்தன்
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மேய்ச்சல் தரை காணியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இன விவசாயிகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் தொடர்ந்தும் ஈடுபடுவதை அனுமதிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண முன்னாள் முதமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களை கேட்டுள்ளார். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லை பிரதேசத்திலே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் தரைக்கான காணி பல வருடங்கள் கடந்தும் இதுவரை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவில்லை.
கிழக்கில் போர் ஒய்ந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும் தீர்வு இல்லாத பிரச்சனையாக இது தொடர்வது குறித்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதமைச்சரான சந்திரகாந்தன் எதிர்வரும் ஆண்டுக்கு முன்னர் நிர்வாக ரீதியாக சுமுகமான முறையில் தீர்வு காணவேண்டும் என தான் இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களையும் எழுத்து மூலமும் தொலைபேசி ஊடாகவும் கேட்டுள்ளதாக கூறினார்.
சில வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதிக்கு உரிய அதிகாரிகளுடன் நேரில் சென்றபோது, சுமார் 500 ஏக்கரில் தானிய செய்கையில் குறித்த செய்கையாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்ததாகவும் இந்த ஆண்டு பருவ மழைக் காலத்தில் பயிர் செய்கையில் ஈடுபட வேண்டாம் என அவர்களை கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு 20 மைல்களுக்கு அப்பாலும் அம்பாறை மாவட்ட தெகியத்தகண்டிய பிரதேச சிங்கள விவசாயிகளுக்கு 2-3 மைல்கள் தூரத்திலும் இந்த காணி இருப்பதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
பயிர்செய்கையாளர்களுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இருதரப்பையும் உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்ப்டடுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிழக்கில் போர் ஒய்ந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும் தீர்வு இல்லாத பிரச்சனையாக இது தொடர்வது குறித்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதமைச்சரான சந்திரகாந்தன் எதிர்வரும் ஆண்டுக்கு முன்னர் நிர்வாக ரீதியாக சுமுகமான முறையில் தீர்வு காணவேண்டும் என தான் இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களையும் எழுத்து மூலமும் தொலைபேசி ஊடாகவும் கேட்டுள்ளதாக கூறினார்.
சில வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதிக்கு உரிய அதிகாரிகளுடன் நேரில் சென்றபோது, சுமார் 500 ஏக்கரில் தானிய செய்கையில் குறித்த செய்கையாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்ததாகவும் இந்த ஆண்டு பருவ மழைக் காலத்தில் பயிர் செய்கையில் ஈடுபட வேண்டாம் என அவர்களை கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு 20 மைல்களுக்கு அப்பாலும் அம்பாறை மாவட்ட தெகியத்தகண்டிய பிரதேச சிங்கள விவசாயிகளுக்கு 2-3 மைல்கள் தூரத்திலும் இந்த காணி இருப்பதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
பயிர்செய்கையாளர்களுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இருதரப்பையும் உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்ப்டடுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள்
இலங்கையில் அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க உள்ளூர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்
இதேவேளை, இலங்கையில் அரசியல் ரீதியாக 'செல்வாக்கு' மிக்க அமைச்சுகளுக்கு, குறிப்பாக ஜனாதிபதிக்கு உட்பட்ட அமைச்சுகளின் அரச நிறுவனங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது நடைமுறையில் கேள்விக்குறியே என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளருமான என்.பி.எம். சைஃப்டீன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
அரசகரும மொழிக்கொள்கையை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்கின்ற அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற போதிலும், 2010-ம் ஆண்டுவரையான தனது 10 ஆண்டுகால பதவிக்காலத்தில் தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'அரசியலமைப்பில் அரசகரும மொழி சிங்களம் மட்டுமல்ல, தமிழும் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும் அதன் நடைமுறையை இன்னும் காணமுடியவில்லை' என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சைஃப்டீன் தெரிவித்தார்.நாட்டில் மொழிப்பிரச்சனை என்பது 1956-ம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது நிலவிய சூழ்நிலையிலிருந்து இன்றுவரை எந்தவிதத்திலும் முன்னேற்றம் அடையவில்லை என்றும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மொழிப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் நிலவிய சூழ்நிலையே இன்னும் நாட்டில் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் பல அரச நிறுவனங்களில் தமிழ் அதிகாரிகள் இல்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பு தெரிந்த அதிகாரிகள் இல்லாத நிறுவனங்கள் பல இருப்பதாகவும் சைஃப்டீன் தெரிவித்தார்.
சில அரச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் அரசகரும மொழிக் கொள்கை சரிவரக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டினால் தேவையற்ற 'முத்திரைகள்' தம்மீது குத்தப்படும் என்று அஞ்சுவதாகவும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் 1987-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின் அங்கமாகவே தமிழும் அரசகரும மொழி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.
அதன்படி சிங்களம், தமிழ் இரண்டும் அரசகரும மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழி என அறிவிக்கப்பட்டது.
அது அரச நிறுவனங்களில் முறையாக பின்பற்றுப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்காகவே அரசகரும மொழிகள் ஆணைக்குழுவும் 1991-ம் ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
dimanche 25 novembre 2012
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளினால் கடந்த ஒன்பது மாதங்களில் 9414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் :ரோஸி
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளினால் கடந்த ஒன்பது மாதங்களில் 9414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4414 பேர் சிறுவர்களாவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,பெண்கள்,சிறுவர்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தி மதிப்பிடப்படுகின்றது. பல நாடுகளில் வறுமை 0.1 வீதமே இருக்கின்றது. இங்கு 99.9 வீதம் வறுமை இருக்கின்றது. ஏனைய 0.1 வீதமானவர்களே போஷாக்குடன் வாழ்கின்றனர். அவ்வாறானவர்கள் எந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரியும்.ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலப்பகுதியில் பெண்கள்,சிறுவர்கள் 9414 பேர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பதற்கு 2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் ஒன்றுமே இல்லை. இத்திட்டத்தில் பெண்கள் தொடர்பான அமைச்சுக்கு 0.08 வீதமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கருணா!
அன்று 13வது திருத்தச் சட்டத்தை தூக்கியெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று 13வது திருத்தம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசுவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நிதி அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து இன்று (24) பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு கிழக்கில் இன்று பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது. உங்களை விட வடக்கு கிழக்கு பகுதிக்கு அதிகம் விஜயம் செய்தவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார். நீங்கள் கொழும்பில் இருப்பதால் அங்கு நடப்பது ஒன்றும் தெரியாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பற்றி பேசுகிறீர்கள். அதனை கொண்டுவந்தது ஐக்கிய தேசியக் கட்சி எனவே அது பற்றி அக்கட்சியிடம் கேளுங்கள். உங்களுக்கு வரலாறு தெரியாது.
1987ல் 13வது திருத்தத்தை தூக்கி வீசிய நீங்கள் இன்று உள்நாட்டில், வெளிநாட்டில் புலம்பெயர் தமிழர்களிடம் 13வது திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.
நீங்கள் புலம்பெயர் தமிழர்களுக்காக அவர்களின் பணத்திற்காக அரசியல் செய்கிறீர்கள். புலம்பெயர் தமிழர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்ல வேண்டாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலம்பெயர் தமிழர்களை ஒருபோதும் வெறுக்கவில்லை. அவர் எப்போதும் அவர்களுக்கு இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கிறார்.
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீது விருப்பம் கொண்டவர்கள் என்றால் அதில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினை பற்றி பேசுங்கள்.
இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
இவ்வாறு விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தாக்கிப் பேசினார். இவர் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை வசனத்திற்கு வசனம் ஆளும் தரப்பு எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவரை உட்சாகப்படுத்தினர்.
நிதி அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து இன்று (24) பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு கிழக்கில் இன்று பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது. உங்களை விட வடக்கு கிழக்கு பகுதிக்கு அதிகம் விஜயம் செய்தவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார். நீங்கள் கொழும்பில் இருப்பதால் அங்கு நடப்பது ஒன்றும் தெரியாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பற்றி பேசுகிறீர்கள். அதனை கொண்டுவந்தது ஐக்கிய தேசியக் கட்சி எனவே அது பற்றி அக்கட்சியிடம் கேளுங்கள். உங்களுக்கு வரலாறு தெரியாது.
1987ல் 13வது திருத்தத்தை தூக்கி வீசிய நீங்கள் இன்று உள்நாட்டில், வெளிநாட்டில் புலம்பெயர் தமிழர்களிடம் 13வது திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.
நீங்கள் புலம்பெயர் தமிழர்களுக்காக அவர்களின் பணத்திற்காக அரசியல் செய்கிறீர்கள். புலம்பெயர் தமிழர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்ல வேண்டாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலம்பெயர் தமிழர்களை ஒருபோதும் வெறுக்கவில்லை. அவர் எப்போதும் அவர்களுக்கு இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கிறார்.
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீது விருப்பம் கொண்டவர்கள் என்றால் அதில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினை பற்றி பேசுங்கள்.
இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
இவ்வாறு விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தாக்கிப் பேசினார். இவர் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை வசனத்திற்கு வசனம் ஆளும் தரப்பு எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவரை உட்சாகப்படுத்தினர்.
Inscription à :
Articles (Atom)