vendredi 23 novembre 2012

ஜகியநாடு மன்னிப்பு கேட்கும் தறூவயிள் கோதாவுக்கு 25 கோடி ரூபா நட்ட ஈட்டை,வழங்க வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு!


பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமைக்காக 25 கோடி ரூபாவினை நட்ட ஈடாக வழங்குமாறு சன்டே லீடர் கல்கிஸ்ச மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நட்ட ஈட்டை, சண்டே லீடர் செயதித்தாளின் முன்னாள் ஆசிரியர் பெட்ரிக்கா ஜேம்ஸ் மற்றும் அந்த செய்தித் தாள் செலுத்த வேண்டும் என கல்கிசை மாவட்ட நீதிபதி பிரியந்த பெர்ணாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை,  வெளியிடுவதற்கும் நிரந்தர தடை விதித்துள்ளது.

இதனிடையே, இலங்கை புகையிலை நிறுவனத்தினால் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெற்றது.

புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், அமைச்சரினால் வடிவமைக்கப்பட்ட பக்கட் முறைமையை எதிர்த்து இந்த வழக்கு தாக்கதல் செய்யப்பட்டிருந்தது.

புகைத்தல் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் வகையில் பக்கட்டுக்களை விற்பவர்கள், அதன் அபாயம் குறித்து விளக்க வேண்டும் என்ற அறிவித்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்க வர்த்த மானியில் பிரசுரமாயிருந்தது.

இதேவேளை, புகைத்தல் தொடர்பான எச்சரிக்கை, வாக்கியம் மூலம் தற்போது அமைந்துள்ளன. இந்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

அதேவேளை, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் தொண்டர் அமைப்புக்கள் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire